வணிகம்
அமேசான் கிறிஸ்துமஸ் ஆஃபர் ஆரம்பம்.. இத விட கம்மி விலையில் கிடைக்காது!
அமேசானில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு சலுகைககள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்தெந்தப் பொருட்களுக்கு எவ்வளவு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
ஒவ்வொரு ஆண்டும் முக்கிய பண்டிகை மற்றும் ஸ்பெஷல் நாட்களில் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆஃபர்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமேசானில் சிறப்பு சலுகை ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஸ்மார்ட்போன்களுக்கு 40 சதவீதம் வரையில் தள்ளுபடியும், லேப்டாப்களுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் மத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற சாம்சங் எம் 51 ஸ்மார்ட்போனுக்கு 20 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு, 22,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதே போல் ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் (4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி) விலை ரூ.13,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.
HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு 1000 ரூபாய் கூடுதல் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆஃபர்கள் என அறிவிக்கப்பட்டாலும் பழைய விலையுடன் ஒப்பிடுகையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.