சினிமா செய்திகள்
சிம்புவின் ஈஸ்வரன் படம் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பு!
சிம்பு நடிப்பில் பொங்கல் ரிலீஸ்க்கு தயாராகி வந்த படம் ஈஸ்வரன்.
ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடும் போதே பொங்கல் வெளியீடு என்று அறிவித்து இருந்தனர்.
ஆனால் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருந்த விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம், பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. திரை அரங்குகளில் இதுவரை 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 1100 திரை அரங்குகளில் 1000 திரை அரங்குகளில் மாஸ்டர் படத்தை வெளியிடத் திரை அரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் குறைந்த திரை அரங்குகளில் ஈஸ்வரன் படத்தை வெளியிட்டால் வசூல் பாதிக்கும்.
எனவே சிலம்பரசன் பிறந்தநாள் சிறப்புப் படமாக ஜனவரி இறுதியில் ஈஸ்வரன் வெளியாகலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. பிப்ரவரி 3-ம் தேதி சிலம்பரசன் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.