தொழில்நுட்பம்
யூட்யூப், ஜிமெயில்… அத்தனை கூகுள் சேவைகளும் முடங்கியது..!
யூட்யூப், ஜீமெயில், கூகுள் டாக்ஸ், கூகுள் மேப்ஸ் உள்ளிட்ட கூகுள் சேவைகள் அனைத்தும் சர்வதேச அளவில் தற்காலிகமாக முடங்கியுள்ளன.
யூட்யூப், ஜீமெயில், கூகுள் டாக்ஸ், கூகுள் மேப்ஸ் என அத்தனை சேவைகளும் பல நாடுகளில் முடங்கியுள்ளன. இந்த தற்காலிக பிரச்னையால் பயனாளர்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை சமுக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். #YouTubeDOWN என்ற ஹேஷ்டேக் தற்போது இந்திய அளவில் ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
கூகுள் சேவைகள் இல்லாமல் உலகமே முடங்கி காணப்படுவதாக ட்விட்டர்வாசிகள் குமுறி வருகின்றனர். பலரும் சமுக வலைதளப் பக்கங்கள் மூலம் கூகுள் நிறுவனத்துக்கே புகார் அளித்தும் வருகின்றனர்.
The world after two minutes without YouTube#YouTubeDOWN ???? #gmail pic.twitter.com/IymR7qcjtV
— Sagar sharma (@sagarji99) December 14, 2020