சினிமா
ரசிகர்கள் அதிர்ச்சி: நடிகர் விஜய் திருமண விழாவில் பங்கேற்க மாட்டார்!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்கார் படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகளில் தளபதி விஜய் பிஸியாக இருக்கிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, நடிகர் விஜய், தனது விஜய் மக்கள் இயக்கத்தின் செயலாளர் புஸி ஆனந்தின் மகள் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டார்.
விஜய் வருவதை அறிந்த ரசிகர்கள் மண்டபத்தில் குவிந்தனர். இரவு நேரம் என்பதால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. திருமண வரவேற்பு மேடையில் விஜயிக்குக் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இனி திருமண விழாவில் நடிகர் விஜய் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வந்துள்ளன. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.