Connect with us

செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: ஆ.ராசா கேள்விக்கு அதிமுகவின் பதில் என்ன?

Published

on

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்தான விசாரணைக்கு அதிமுக அரசு ஒத்துழைக்க மறுக்கிறது என்று திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் இது குறித்து ஜெயக்குமார் பேசுகையில், ‘ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் இருப்பதால் அது குறித்து விசாரிக்க வேண்டும் என்று பொது மக்கள் கருதினார்கள். அந்த அடிப்படையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, விசாரணை ஆணையம் அமைத்தது. தற்போது அந்த ஆணையத்தின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை இருக்கிறது. அதே நேரத்தில் எப்போது தடை விலகுகிறதோ அப்போது விசாரணை மீண்டும் துவங்கப்படும். ஜெயலலிதாவின் மரணம் குறித்து யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் குறித்த உண்மையை வெளியே தெரிய வரும்’ என்று கூறினார்.

ஆ.ராசா தொடர்ச்சியாக அதிமுக அரசின் மீதும், அதன் முக்கிய நிர்வாகிகள் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். குறிப்பாக அவர் ஜெயலலிதா மீது குற்றம் நிரூபிக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி அதிகம் பேசி வருகிறார். ராசாவின் கருத்துகளுக்கு அதிமுக தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவ்விவகாரம் பற்றி ஜெயக்குமார், ‘திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. நில அபகரிப்புக் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளன. இது குறித்துப் பல்வேறு வழக்குகள் சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன. ஆனால், அதிமுகவில் இருக்கும் முக்கிய தலைவர்கள் மீது இப்படி வழக்கு ஏதும் நடந்து வருகிறதா?’ எனக் கேள்வி எழுப்பினார்.

 

author avatar
seithichurul
தமிழ் பஞ்சாங்கம்4 மணி நேரங்கள் ago

இன்றைய பஞ்சாங்கம்: 18.08.2024 (ஆவணி 02)

வணிகம்4 மணி நேரங்கள் ago

தங்கம் விலை உயர்வின் 3 முக்கிய காரணங்கள்! எப்போது குறையும்?

சினிமா5 மணி நேரங்கள் ago

ஸ்திரீ 2 திரையை கலக்கும்! தங்கலானை பின்னுக்கு தள்ளிய வசூல்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

குரு பெயர்ச்சி 2024: ரிஷபம் மற்றும் சிம்மம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

சினிமா5 மணி நேரங்கள் ago

டிமான்ட்டி காலனி-2 படம்: ரசிகர்கள் ட்விட்டர் ரிவ்யூவால் படம் எப்படி இருக்கு?

தினபலன்5 மணி நேரங்கள் ago

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 18, 2024)!

சினிமா15 மணி நேரங்கள் ago

கோல்ட் கேஸ்: ஓடிடி திரையை உலுக்கிய மர்ம திரில்லர்!

ஜோதிடம்15 மணி நேரங்கள் ago

6 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்16 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசி பலன் 2024!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

வணிகம்6 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா4 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

சினிமா3 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்7 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்4 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!