டிவி
எக்ஸ் க்யூஸ் மீ ரியோ.. கேட்கும் கேள்விக்கு புரிந்துகொண்டு பதில் செல்லுங்கள்.. கழங்கடித்த அனிதா!
பிக்பாஸ் வீட்டின் 59வது நாளுக்கான முதல் ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது.
சென்ற வாரம் தடை பெற்ற கால் செண்டர் டாஸ்க் இன்றும் தொடருகிறது. அதில் ரியோவுக்கு ஆல் செய்கிறார் அனிதா. அனிதா என்ற உடனே உங்களுக்குப் புரிந்து இருக்கும். எதிரில் உள்ளவர்களைப் பேச விடமாட்டார். அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்.
ரியோவிடம், நீங்கள் தனிநபராக விளையாடுகிறீர்களா? என்று கேட்கிறார். நான் தனிநபராகத்தான் விளையாடுகிறேன் என்கிறார் ரியோ. பார்க்க அப்படி தெரியவில்லை என்பதை நான் சொல்லிடுரேன். வெளியில் போடாத ஒரு முகமுடியை இங்க போட்டுட்டு வந்து இருக்கிறீர்கள். பாதி ரியோவை தான் நான் காட்டுவேன், எனக்கு டிராப்பி கொடு என்றால், எப்படி மக்கள் கொடுப்பார்கள்.
உங்கள் மீதான குறையைச் சொல்ல ஒருத்தர் எழுந்தால், அவர்கள் எழுவதற்கு கூட நீங்கள் விடுவதில்லை என்று அனிதா கேட்கிறார். அதை நான் இல்லை என்கிறேன் என்று ரியோ கூறும் போதே, எக்ஸ் க்யூஸ் மீ ரியோ, ஒரே ஒரு நிமிஷம் கேட்கும் கேள்விக்குப் புரிந்துகொண்டு பதில் சொன்னால் நல்ல இருக்கும் என்று நினைக்கிறேன் என்று அனிதா கூறுகிறார்.
டாஸ்க் முடிந்து வெளியில் வரும் ரியோ, குட் கால் என்று அனிதாவுக்கு வாழ்த்து தெரிவிக்க, அனிதா நன்றி தெரிவிக்கிறார். உள்ளே வந்து வீட்டில் இருப்பவர்களுடன் விவாதிக்கும் ரியோ, டாஸ்க் என்பதால் கண்ட்ரோல் பண்ணிக்கொண்டேன் என்று கண்ணைக் கசக்குகிறார்.
எனவே இன்று அனிதா, ரியோ இடையில் பூகம்பம் வெடிக்குமா, இல்லை என்றால் நேற்று போலச் சப்பையாக முடிந்துவிடுமா?