சினிமா செய்திகள்
புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நடிகர் தவசி காலமானார்; திரை உலகினர் அதிர்ச்சி!
புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் தவசி, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்,
புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் தவசி, திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அறுவை சிகிச்சை மூலம் உணவு குழாயிலிருந்த கேன்சர் தொற்று நீக்கப்பட்டு நலமுடன் தவசி உள்ளார் என்று கூறப்பட்டு வந்தது.
சிகிச்சைக்குப் பின் தவசியின் உடல் நிலை பற்றி அறிந்த திரைத்துறையினர் பலரும் உதவினர். விரைவில் நடிகர் தவசி மீசை முறுக்கிக்கொண்ட திரும்புவார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் எதிர்பாரா விதமாக இன்று இரவு அவர் காலமானார்.
நடிகர் தவசியின் மரணத்திற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், அழகர் சாமியின் குதிரை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் தவசி என்பது குறிப்பிடத்தக்கது.