Connect with us

ஆரோக்கியம்

குளிர்காலத்தில் ஏற்படும் சளி, இருமல் உடல்நலக் குறைபாட்டுக்கான வீட்டு வைத்தியம்!

Published

on

குளிர்காலத்தில் சளி, இருமல் போன்ற உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும். அவற்றுக்கு நம் வீட்டிலேயே எளிய தீர்வுகள் இருக்கும். அவை குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

துளசி

சளி, ஜுரத்திற்கு நல்லது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

மஞ்சள்

மஞ்சளில் இயற்கையாகவே நஞ்சை முறிக்கும் தன்மையும் உள்ளது. மஞ்சளை பேஸ்ட போல் குழைத்துக்கொண்டு அதை சூடு கட்டியின் மீது பத்து போடுங்கள்ந்து. இதை தினமும் செய்தால் சூடு கட்டு நீங்கும். மஞ்சள் பொடியை எலுமிச்சை சாறு கலந்து அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்புகள் மறையும். சளியினால் தொண்டை அடைப்பு ஏற்பட்டால் தேனுடன் மஞ்சள் தூள் கலந்து காலை மாலை சாப்பிட சளி நீங்கும்.

தூதுவளை

மழைக்காலம் நெருங்குவதால் அனைவருக்கும் சளி, இருமல் உள்ளிட்ட நோய்கள் வரும் வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் நுரையீரல் சார்ந்த நோய்களின் தாக்கத்தைக் குறைப்பதில் தூதுவளை பெரும் பங்கு வகிக்கிறது. குறிப்பாக ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது. தூதுவளையை உலர வைத்துப் பொடி செய்து வைத்து பாலில் கலந்து சாப்பிடலாம். தூதுவளை இலையைத் துவையல் அரைத்தும், ரசம் வைத்தும் சாப்பிடலாம்.

கருமிளகு

கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்லது. கருமிளகு டீ குடிப்பது தொண்டை வலியைக் குறைக்கும். ஒரு கப் வெந்நீரில் 2 டேபிள் ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்க்கவும். இதை அப்படியே மூடி வைக்கவும். 15 நிமிடங்களுக்கு பிறகு எடுத்து இதை பருகலாம். மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும் இருமல் உடனே நிற்கும்.

கிராம்பு

இந்தியாவில் தேநீர் அருந்துபவர்கள் அதிகம். ஆகையால் அது ஆரோக்கியமாக இருப்பது அவசியம். தேநீருக்கு ஆரோக்கியம் சேர்ப்பதில் முக்கியமானது கிராம்பு. உடலில் தொற்று நோய்கள் தாக்காமல், ஈறுகள் பிரச்சனை, அல்சர் போன்றவற்றிலிருந்து கிராம்பு பாதுகாக்கிறது. மேலும், தொண்டை புண், சளி, இருமல், தலைவலி குணமாகவும் உதவுகிறது. கிராம்பு வாங்கும்போது பெரிய கிராம்புகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

கர்ப்பூரவள்ளி

கர்ப்பூரவள்ளி இலையை முறையை முறைப்படி கொடுத்து வர, குழந்தைகளுக்கு வருகின்ற இருமல், நெஞ்சில் சளி, உள்நாக்கு அழற்சி, நீர்க்கோவை அணைத்தும் நீங்கும்.

ஓமம்

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்குப் பசியைத் தூண்டுவதற்கு ஓமம் உதவுகிறது. நெஞ்சு சளி, வறட்டு இருமல் இருப்பவர்களுக்கு ஓமம் சிறந்த மருந்தாக அமைகிறது. வயிற்றுப் பகுதியில் புண் இருப்பவர்கள் கண்டிப்பாக ஓமம் கசாயத்தைக் குடித்து வந்தால் வயிற்றுப்புண் சரியாகிவிடும. செரிமான சக்தியை தூண்டுவதிலும் ஓமம் சிறந்த மருந்தாக அமைகிறது. தண்ணீரில் ஓமம், தேனை கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு சரியாகும்.

வெங்காயம்

நெருப்பில் சுட்ட வெங்காயத்தைச் சாப்பிட்டு வந்தால் இருமல், கபக்கட்டு நீங்கும்.

சீரகம்

நோய் எதிர்ப்பு சக்தியைச் சீராகப் பராமரிக்கச் சீரக நீர் குடிக்க வேண்டியது அவசியம். இது சுவாச கட்டமைப்புக்கு நன்மை சேர்த்து, சளியைக் குணப்படுத்தும். மேலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழிவகுக்கவும், நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் உதவி செய்கிறது. அசிடிட்டியையும் குணமாக்கும். ஆனால், தினசரி சீரகம் சாப்பிட்டால் வயிறு உப்புசம் ஏற்பட வாய்ப்புள்ளது.

வணிகம்5 மணி நேரங்கள் ago

ரிலையன்ஸ் ஜியோ 5 ஜி அப்கிரேட் பிளான் இப்போது ரூ.51 முதல்! முழு விவரம்!

பிற விளையாட்டுகள்6 மணி நேரங்கள் ago

ஜான் சீனா WWE போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்! கடைசி போட்டி எப்போது?

heart attack
ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

மாரடைப்பைத் தடுக்க மருத்துவர்கள் சொல்லும் 10 வழிகள்!

பல்சுவை7 மணி நேரங்கள் ago

தேசிய மன்னிப்பு நாள்: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் தாக்கம்

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

சிவப்பு இறைச்சி உட்கொள்வது பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா? ஆய்வு முடிவுகள்

வணிகம்9 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை மாற்றமில்லை (07/07/2024)!

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

வீட்டிலிருந்தபடியே பெண்கள் கைநிறைய பணம் சம்பாதிக்க 5 வேலைகள்!

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஜூலை 7, 2024)

அழகு குறிப்பு18 மணி நேரங்கள் ago

முகச்சுருக்கத்தைத் தடுத்து இளமையைப் பெறுங்கள் – இயற்கை வழிமுறைகள்!

கிரிக்கெட்19 மணி நேரங்கள் ago

டி20 உலக சாம்பியன் இந்திய அணி, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தோல்வி!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் ரூ.1000 கோடி முதலீடு செய்யும் கேப்ஜெமினி! 5000 ஐடி வேலை தேடுபவர்களுக்கு ஜாக்பாட்!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

இந்திய விமானப்படையில் அக்னிவீர் வாயு சேர்க்கை 2024: முழு விவரம்

வணிகம்5 நாட்கள் ago

முதல் முறையாக ஜிஎஸ்டி வருவாயை அறிவிக்காத மத்திய அரசு! என்ன காரணம்?

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

NMDC ஆணையத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 80+

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 100+

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் சிசு இறப்பு விகிதம் 9 க்கும் கீழ் குறைத்து சாதனை!

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டங்களை தமிழில் சொல்வது எப்படி? சாமானிய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னையில் பானி பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம்: சோதனை தீவிரம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு: 8326 காலி பணியிடங்கள்!

வணிகம்1 நாள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!06-07-2024