Connect with us

ஆரோக்கியம்

சீரகத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

Published

on

உணவுகளில் சீரகம் தனித்துவ சுவை மற்றும் நறுமணத்தை அளிக்க கூடியது. மலச்சிக்கலுக்கு ஒரு சிறந்த மருந்தாக இருப்பதுடன், குடலில் ஜீரணிக்காத நச்சுக்களை நீக்கி செரிமான பிரச்சனைகளை தவிர்க்கிறது. சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வர, சீரகத்தை வைட்டமின் சி உள்ளதால் தூக்கமின்மை பிரச்சனையும் நீங்கும். ஆனால் இதை அதிகம் சாப்பிட்டாலும ஆபத்து என்பது குறிப்பிடத்தக்கது.

தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுக்கு மிகவும் நல்லது. அஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். வயிற்று வலிக்கும் தீர்வு தரும். கர்ப்பிணி பெண்களும் சீரக நீர் பருகலாம். அது கர்ப்பகாலத்தில் செரிமானத்தை மேம்படுத்த உதவும். கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்திற்கு தேவையான நொதிகளைத் தூண்டும். பால் சுரப்பையும் ஊக்குவிக்கும்.

மாதவிடாய் தள்ளிப்போகிறது என்றாலோ, பிசிஓடி எனும் சினைப்பை நீர்க்கட்டிகள் பிரச்சினையால் அவதிப்பட்டாலோ, கருஞ்சீரகடத்தை நன்றாக அரைத்து பொடித்து, அதை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து, 10 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர பிரச்சினை சரியாகும். கருஞ்சீரகம் உடலில் ஏற்படும் வலியை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மழை மற்றும பனி காலங்களில் உடலுக்கு தேவையான வெப்பதை கொடுக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்க சீரக நீர் குடிக்க வேண்டியது அவசியம். இது சுவாச கட்டமைப்புக்கு நன்மை சேர்த்து, சளியை குணப்படுத்தும். மேலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழிவகுக்கவும், நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் உதவி செய்கிறது. அசிடிட்டியையும் குணமாக்கும். ஆனால், தினசரி சீரகம் சாப்பிட்டால் வயிறு உப்புசம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இரும்பு சத்து குறைபாட்டையும் சீரக நீர் சீர் செய்யும். மாதவிடாய் காலத்தில் வலி நிவாரணியாகவும் விளங்குகிறது. அந்த சமயத்தில் சீரக நீர் பருகுவதன் மூலம் வலி கட்டுப்படும். சரும பளபளப்புக்கும் சீரக நீரை பயன்படுத்தலாம். அதில் பொட்டாசியம் மட்டுமின்றி கால்சியம், செலினியம், மாங்கனீஸ் உள்ளிட்டவை இருக்கின்றன. அவை தோலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.

மருத்துவக் குணங்கள்:

* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால் வயிற்றுப் பொருமல் வற்றி நலம் பயக்கும்.

* சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய அரைத்து எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால் குடல் கோளாறுகள் குணமாகும்.

* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து சாப்பிட்டால் அதிக பேதி போக்கு நிற்கும்.

* பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய அரைத்து பசும்பாலில் கலந்து குடித்து வர நல்ல பலன் கிடக்கும்.

* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.

* சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.

* கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட்டால் தொடர் விக்கல் விலகும்.

* மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

* தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து சீரகக் குடிநீர் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை நாள் முழுவதும் அவ்வப்போது பருகி வர எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் இந்தச் சீரக நீரூக்கு உண்டு.

* சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.

* சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே வாரம் ஒருமுறை தடுப்பு முறையாகக் கூட இதைச் சாப்பிடலாம்.

* உடலுக்கு குளிர்ச்சியும் தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.

* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடியைச் சேர்த்து பருகினால் ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால் கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டியை பொடித்து சாப்பிட்டால் மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.

* சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம் தினம் இரண்டு வேளையாக சாப்பிட்டால் உடல் அசதி நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.

* சீரகத்தை லேசாக வறுத்து அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புகள் வலுப்பெறும், நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (05/10/2024)

வணிகம்2 நாட்கள் ago

2024-ம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய 10 மாநிலங்கள்

வணிகம்2 நாட்கள் ago

2025-ம் ஆண்டு இந்தியர்களின் சம்பளம் சராசரியாக 9.5% வரை உயரும்! வெளியான முக்கிய ஆய்வு அறிக்கை!

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய (03/10/2024) ராசிபலன்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய (02/10/2024) ராசிபலன்

தனியார் வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

Infosys இல் Opentext VIM Developer பணிக்கு அழைப்பு!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள்: உடல் சோர்வு முதல் தலைவலி வரை!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

HAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் அருள் பெறும் வழிபாடு!

ஜோதிடம்4 நாட்கள் ago

மகாளய அமாவாசை 2024: முன்னோர்களுக்கு நன்றி செலுத்தும் திருநாள்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

ரூ.42,000/- சம்பளத்தில் TANUVAS பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (29/09/2024)!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (30/09/2024)

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்7 நாட்கள் ago

அக்டோபர் 1 முதல் 15 வரை இருவார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சுவையான சிக்கன் கட்லெட்.. ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

மதுரையின் பிரசித்தி பெற்ற முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு செய்யலாம் வாங்க!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு செய்வது எப்படி?

தினபலன்7 நாட்கள் ago

செப்டம்பர் 29 – இன்றைய ராசி பலன்கள்!

ஜோதிடம்5 நாட்கள் ago

சூரிய கிரகணம் 2024: இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை!