Connect with us

பல்சுவை

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

Published

on

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
உயர் இரத்த அழுத்தம் ஒருவருக்கு இருக்கிறது என்றால் இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்தை அதிகரிக்கும். உலகம் முழுவதிலும் உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்படுபவர்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் 250 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு இரத்த அழுத்தம் பாதிப்பு உள்ளதாகச் சமீபத்திய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இப்படிப்பட்ட் பாதிப்புகளை ஏற்படுத்தும் உயர் உரத்த அழுத்தினை உணவு மற்றும் வாழ்க்கை முறையினை மாற்றி அமைப்பதன் மூலமாகக் கட்டுப்படுத்த முடியும். எனவே உணவு பழக்க வழக்கங்கள் மூலமாக எப்படி உயர் இரத்த அழுத்தத்தினைக் குறைப்பது என்று விளக்கமாக இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் பட்டியல்.

சோடியம் மற்றும் உப்பு

ஒரு நாளைக்கு 2,300 மில்லி கிராம்களுக்கும் குறைவாகவே சோடியம் உப்புகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பேக் செய்யப்பட்ட உணவு வகைகளில் 5 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாக உப்பு பயன்படுத்தி இருந்தால் அவற்றை எடுத்துக்கொள்ளலாம். இதுவே 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட பீன்ஸ் கொட்டைகள்

பதப்படுத்தப்பட்ட அல்லது மசாலாக்கல் போடப்பட்டு அல்லது வறுக்கப்பட்ட பீன்ஸ் கொட்டை வகைகளைத் தவிர்க்க வேண்டும். இவற்றில் அதிகப்படியான சோடியம் உப்புகள் சேர்க்கப்பட்டு இருக்கும். அதாவது மசாலா போடப்பட்ட வேர்க்கடலை போன்றவற்றிலும் உப்பு அதிகமாக இருக்கும். காய வைக்கப்பட்ட பதபப்டுத்தபப்ட்ட ராஜ்மா போன்ற பீன்ஸ் கொட்டைகளைத் தண்ணீரில் நன்கு ஊரவைத்துக் கழுவிய பிறகு பயன்படுத்த வேண்டும்.

சூப்புகள்

சூப்பு வகைகள் தற்போது பேக் செய்யப்பட்டு விற்பனை செய்கின்றன. அவற்றில் உப்பு அதிகம் சேர்க்கப்பட்டு இருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம். நீங்கள் வீட்டிலேயே மசாலாக்கல் தயாரித்துச் சூப்புச் செய்து குடிக்க வேண்டும் என்றாலும் உப்பைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

சுவையூட்டிகள்

கடைகளில் வாங்கும் தக்காளி சாஸ், பசைகள் மற்றும் கெட்ச்அப் போன்றவையில் பெரும்பாலும் பதப்படுத்த அதிக உப்புச் சேர்க்கப்படுகிறது. எனவே இவற்றைச் சொந்தமாகத் தயாரித்துப் பயன்படுத்துங்கள்.

பேக் செய்யப்பட்ட இறைச்சி

பேக் செய்யப்பட்ட இறைச்சி, ஹாட் டாக் போன்ற மேற்கத்திய உணவுகளில் அதிக உப்புக் கலக்கப்படுகின்றன. எனவே வீட்டின் அருகில் பிரெஷ் ஆகக் கிடைக்கும் இறைச்சிகளை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.

மீன் மற்றும் கருவாடு

கடல் மீன் மற்றும் கருவாடு போன்றவற்றில் அதிகளவில் உப்பு இருக்கும் என்பதால் இவற்றை முழுமையாகத் தவிர்த்து விடுக.

உறைந்த உணவு

பீட்சா, சிக்கன் ஸ்ட்ரிப்ஸ் போன்ற உறைந்த நிலையில் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் தேவையில்லாத ரசாயனங்களுடன் சோடியம் உப்பும் அதிகளவில் கலந்து இருக்கும். ஆரோக்கியமான உணவுகள் என்று விளம்பரப்படுத்தப்படும் பல பேக் செய்யப்பட்ட உணவுகளில் சோடியம் உப்புகள் அதிகம் இருக்கும்.

சர்க்கரை

இயற்கை அல்லது இரசாயனம் என இரண்டு வகையான சர்க்கரையும் உங்கள் எடையினை அதிகரிப்பது மட்டும் இல்லாமல் உயர் இரத்த அழுத்த வரவும் காரணமாக உள்ளன. எனவே ஆண்கள் ஒரு நாளைக்கு 37.5 கிராம் (9 ஸ்பூன்) சர்க்கரையும், பெண்கள் 25 கிராம் (6 ஸ்பூன்) வரையிலும் மட்டுமே சர்க்கரை எடுத்துக்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கேண்டி மிட்டாய்கள்

கேண்டி மிட்டாய்களிலும் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுவதால் இந்த மிட்டாய்களை உயர் இரத்தம் அழுத்தம் உள்ளவர்கள் தொடவே கூடாது. இந்த மிட்டாய்களில் பழத்திற்குப் பதிலாக இரசாயன கலவைகள் இருக்கும். இதுவும் உயர் இரத்த அழுத்தத்தினை அதிகப்படுத்தும்.

குளிர்பானங்கள்

குளிர்பானங்களில் அதிகப்படியான சர்க்கரை இருக்கும், சோடாக்களில் குறைந்தபட்சம் 9 ஸ்பூனிற்கு மேல் சர்க்கரை கழிக்கப்பட்டு இருக்கும். உங்கள் ஒரு நாள் கலோரிக்கு தேவையான அளவு சர்க்கரையிருக்கும் என்பதால் இதனைத் தவிற்அ வேண்டும்.

பழரசம்

குளிர்பானம் இல்லை நான் பிரெஷான பழரசம் தான் அருந்துகிறேன் என்றாலும் சர்க்கரை சேர்க்காமல் ஐஸ் வாட்டர் இல்லாமல் எடுத்துக்கொள்ளுங்கள். இயற்கையாகவே பழ வகைகளில் சர்க்கரை இருக்கும்.

பேக்கிரி உணவுகள்

கேக், சாக்லேட், பிஸ்கேட், பப்ஸ் போன்றவற்றிலும் சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் இருக்கும் என்பதால் இவற்றைச் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

மதுபானம்

மது பானங்கள் இதய நோயைக் குறைக்கும் என்றும் கூறினாலும் அவை அளவிற்கு மீறினால் நீரிழிவு மற்றும் நீண்ட கால எடை அதிகரிப்பு போன்றவற்றை ஏற்படுத்து இரத்த அழுத்தத்தினை அதிகரிக்கும் எனவே ஆண்கள் இரண்டு குவளைகள் மற்றும் பெண்கள் 1 குலவலை ஒரு நாள் என்று மட்டும் எடுத்துக்கொண்டால் சரியாக இருக்கும்.

ஊறுகாய்

ஊறுகாய் குறைவான கலோரி என்றாலும் அதிகச் சோடியம் உள்ள ஒரு உணவு ஆகும். பொதுவாக ஒரு ஊறுகாய் துண்டில் 570 மில்லி கிராம் வரை சோடியம் இருக்கும். எனவே உயர் இரத்தம் அழுத்தம் உள்ளவர்கள் கண்டிப்பாகத் தவிர்க வேண்டும்.

பால்

பாலில் அதிகப்படியான கேல்ஷியம் இருந்தாலும் கொழுப்பு சத்து அதிகம் கொண்டு இருக்கும். பால் உடன் நாம் பொதுவாகச் சர்க்கரையும் சேர்க்கும் போது அதிகக் கொழுப்பு சேர்வது உயர் இரத்த அழுத்தத்தினை ஏற்படுத்தும்.

நூடல்ஸ் மற்றும் சேமியா உப்புமா

ஒரு நூடல்ஸ் பாக்கெட் அல்லது சேமியா உப்புமா போன்றவற்றில் கொழுப்பு மட்டும் இல்லாமல் 1,580 மில்லி கிராம் வரை உப்பு இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது.

அப்பளம்

நம்மில் பலருக்கு சாம்பார் சாதம், பொரியல், அப்பளம் போன்றவை மதிய உணவில் இல்லை என்றால் அவ்வளவு தான். கோபம் வருமே பாருங்கள். அப்பளத்தில் அதிகப்படியான ஔப்பு இருக்கும், அதுமட்டும் இல்லாமல் சாம்பார், சாதம், ரசம், பொரியல் என அனைத்திலும் நாம் உப்பு சேர்க்கும் போது எளிதாக நம்மை உயர் இரத்த அழுத்தம் தாக்கும். எனவே உணவில் உப்பைக் குறைத்து அப்பளத்தினைத் தவிர்ப்பது நல்லது.

ஐஸ் கிரீம்

ஐஸ் கிரிம்களில் சர்க்கரை மற்றும் பால் பொருட்கள் மட்டும் இல்லாமல் பல இரசாயன சுவையூட்டிகளும் சேர்க்கப்படுவதால் இவற்றால் அதிகக் கலோரி, கொழுப்பு மற்றும் சோடியம் உள்ளிட்டவை உடலில் சேர்ந்து உயர் இரத்த அழுத்தத்தினை ஏற்படுத்தும்.

புகை பிடித்தல்

புகைபிடிக்காதவரை விடப் புகை பிடிப்பவர்களுக்கு அதிகமாக இரத்த அழுத்தும் இருக்கும். எனவே இதய நோய், ஸ்ட்ரோக் மற்றும் கேன்சர் உள்ளிட்ட பாதிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

ஆட்டு இறைச்சி

ஆட்டு இறைச்சியில் அதிகமாகக் கொழுப்பு இருக்கும் என்பதால் இவற்றைத் தவிர்ப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தினைக் குறைக்க முடியும்.

மாட்டிறைச்சி

ஆட்டுக்கறி போன்றே மாட்டிறைச்சியிலும் அதிகமாகக் கொழுப்பு இருக்கும். எனவே பொதுவாகவே மருத்துவர்கள் சிவப்பாக உள்ள மாமிச வகைகளைத் தவிர்ப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தினைத் தவிர்க்கலாம் என்கின்றனர்.

பட்டர் மற்றும் சீஸ்

பால் போன்றே அதில் இருந்து எடுக்கப்படும் பட்டர் மற்றும் சீஸிலும் கொழுப்பு சத்து அதிகம் உள்ளதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுத்தும் என்கின்றனர்.

குறிப்பு

மேலே கூரிய உணவுகளை எல்லாம் நீங்கள் தவிர்த்து வந்தால் மருத்துவச் செலவே இல்லாமல் உயர் இரத்த அழுத்தத்தினைத் தவிர்த்துவிட்டு நலமுடன் வாழலாம்.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!