சினிமா செய்திகள்
சர்கார் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘சிம்டாங்காரன்’ வெளியீடு!
விஜய், கீர்த்திச் சுரேஷ், வரலட்சுமி நடிப்பில் ஏர் முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் சர்கார் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘சிம்டாங்காரன்’ நாளை வெளியிடப்படும் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சர்கார் திரைப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசை அமைத்து வருகிறார். அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று சர்கார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் பங்கேற்கவும் சன்பிச்சர்ஸ் பல விதமான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
சர்கார் திரைப்படத்தின் ‘சிம்டாங்காரன்’ சிங்கிள் டிராக் செப்டம்பர் 24-ம் தேதி மாலை 6 மணியளவில் வெளியாக உள்ளது.