Connect with us

தினபலன்

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (13/10/2020)

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

13-10-2020 

செவ்வாய்கிழமை

 

மேஷம்:

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில்  சுக்ரன் –  தைரிய ஸ்தானத்தில் ராஹூ –  பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன்,  கேது, சனி –  தொழில் ஸ்தானத்தில் செவ்வாய்,   குரு (அதி. சா) – அயன, சயன, போக ஸ்தானத்தில்  புதன், சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  

 

இன்று இரவு 7.36 மணிக்கு சூர்ய பகவான் ராசிக்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. செல்வம் சேரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.  அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சனைகளிலும் வாக்குவாதத்திலும்  வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். ஆனால் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை  நம்புவதிலும் எச்சரிக்கை தேவை. 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

 

ரிஷபம்:

கிரகநிலை:

ராசியில்  சுக்ரன் – குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ –  அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன்,  கேது, சனி  – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்,   குரு (அதி. சா)  – லாப ஸ்தானத்தில்  புதன், சூர்யன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

இன்று இரவு 7.36 மணிக்கு சூர்ய பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகி செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

 

மிதுனம்:

கிரகநிலை:

ராசியில்  ராஹூ –  களத்திர ஸ்தானத்தில் சந்திரன், கேது, சனி – அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா) –  தொழில் ஸ்தானத்தில்  புதன்,  சூர்யன்  – அயன, சயன, போக ஸ்தானத்தில்  சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

இன்று இரவு 7.36 மணிக்கு சூர்ய பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும்.  

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

 

கடகம்:

கிரகநிலை:

ரண, ருண ஸ்தானத்தில்  சந்திரன், கேது, சனி –  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா)  –  பாக்கிய ஸ்தானத்தில்  புதன், சூர்யன் –  லாப ஸ்தானத்தில்  சுக்ரன் –  அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

இன்று இரவு 7.36 மணிக்கு சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை  ஒப்படைப்பதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள்  விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

 

சிம்மம்:

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில்  சந்திரன்,  கேது, சனி –  ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா) –  அஷ்டம ஸ்தானத்தில்   புதன், சூர்யன் – தொழில் ஸ்தானத்தில்  சுக்ரன்  –  லாப ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

 

இன்று இரவு 7.36 மணிக்கு சூர்ய பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது.  மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்து பேசுவது நல்லது. ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

 

கன்னி:

கிரகநிலை:

சுக  ஸ்தானத்தில்  சந்திரன்,  கேது, சனி – பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா) –  களத்திர ஸ்தானத்தில்  புதன், சூர்யன் –   பாக்கிய  ஸ்தானத்தில் சுக்ரன் –  தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன. 

 

இன்று இரவு 7.36 மணிக்கு சூர்ய பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று தொழில் வியாபாரம் மூலம் வர வேண் டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

 

துலாம்:

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் சந்திரன்,  கேது, சனி – சுக  ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா) –  ரண, ருண ஸ்தானத்தில்   புதன், சூர்யன் –  அஷ்டம  ஸ்தானத்தில்  சுக்ரன் –  பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.  

 

இன்று இரவு 7.36 மணிக்கு சூர்ய பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே  நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள்  உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

 

விருச்சிகம்:

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன்,  கேது, சனி  –   தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா) – பஞ்சம ஸ்தானத்தில்   புதன், சூர்யன் –  களத்திர ஸ்தானத்தில்   சுக்ரன் –  அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு  என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

இன்று இரவு 7.36 மணிக்கு சூர்ய பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக் கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும்.    மாணவர்களுக்கு  கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். சகமாணவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

 

தனுசு:

கிரகநிலை:

ராசியில்  சந்திரன்,  கேது, சனி – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா) –  சுக  ஸ்தானத்தில்  புதன்,  சூர்யன் –  ரண, ருண  ஸ்தானத்தில்  சுக்ரன் – களத்திர ஸ்தானத்தில்  ராஹு  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

 

இன்று இரவு 7.36 மணிக்கு சூர்ய பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று எதிலும் கூடுதல் கவனம் தேவை. மனக்கவலை நீங்கும். காரிய வெற்றி உண்டாகும். எந்த பிரச்சனைகள் வந்தாலும், எதிர்த்து நின்று சமாளிப்பீர்கள். வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

 

மகரம்:

கிரகநிலை:

ராசியில் செவ்வாய்,  குரு (அதி. சா) –  தைரிய ஸ்தானத்தில்   புதன்,  சூர்யன் – பஞ்சம  ஸ்தானத்தில்  சுக்ரன் –  ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ  –  அயன, சயன,  போக ஸ்தானத்தில் சந்திரன், கேது, சனி  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

 

இன்று இரவு 7.36 மணிக்கு சூர்ய பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் அதிகமாகும். நெருங்கிய நண்பர்களிடம்  மனஸ்தாபம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1,2

 

கும்பம்:

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  புதன்,  சூர்யன்  – சுக  ஸ்தானத்தில்  சுக்ரன் –  பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ  –  லாப ஸ்தானத்தில் சந்திரன்,  கேது, சனி – அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா)  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

 

இன்று இரவு 7.36 மணிக்கு சூர்ய பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒருவகையில் வாக்குவாதம் உண்டாகும். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

 

மீனம்:

கிரகநிலை:

ராசியில்  புதன்,  சூர்யன் –  தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் –  சுக ஸ்தானத்தில்  ராஹூ –  தொழில்  ஸ்தானத்தில் சந்திரன், கேது, சனி – லாப ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா)  என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

இன்று இரவு 7.36 மணிக்கு சூர்ய பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று கணவன், மனைவிக் கிடையே  சிறுசிறு மனஸ்தாபம் உண்டாகும். சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அடுத்தவர்களிடம் பேசும் போது யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரத்தில் தாமதம் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4, 6

author avatar
seithichurul
சினிமா4 மணி நேரங்கள் ago

கோல்ட் கேஸ்: ஓடிடி திரையை உலுக்கிய மர்ம திரில்லர்!

ஜோதிடம்4 மணி நேரங்கள் ago

6 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்4 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசி பலன் 2024!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்1 நாள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்1 நாள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா1 நாள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

சினிமா3 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்4 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!