சினிமா செய்திகள்
மிகப்பெரிய எதிர்பார்புகளுக்கிடையில் இன்று தொடங்கும் பிக்பாஸ் சீசன் 4!
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தமிழில் இன்று முதல் தொடங்குகிறது.
முதல் மூன்று சீசன் போன்று 4வது சீசன் நிகழ்ச்சியையும் கமல் ஹாசன் தொகுத்து வழங்க, விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சிசனிலும், இதுவரையில் பல்வேறு சர்ச்சை நிகழ்ந்துள்ளன. அதே போன்று பிக்பாஸ் சீசன் 4-லும் பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது என்று கூறலாம்.
இன்னும் சில மணி நேரங்களில் பிக்பாஸ் சீசன் 4 தொடங்க உள்ள நிலையில், யார் போட்டியாளர்கள் என்று பல பட்டியல்கள் ஆன்லைனில் பரவி வருகிறது.
காத்திருப்போம், உண்மையில் யாரெல்லாம் பிக்பாஸ் சீசன் 4-ல் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளார்கள் என்று காண.