டிவி
லீக்கான புதிய பிக்பஸ் வீட்டின் புகைப்படங்கள் வைரல்!
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான ஷோக்களில் முக்கியமான ஒன்று பிக்பாஸ்.
தமிழில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்க, இந்தியில் சல்மான் கான், தெலுங்கில் நாகர்ஜூனா, கன்னடத்தில் சுதிப் ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர்.
விரைவில் தமிழில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்க உள்ள நிலையில் இந்தியில் பிக்பாஸ் சீசன் 14 நிகழ்ச்சி தொடங்க உள்ளது. சல்மான் கான் 11வது முறையாகத் தொகுத்து வழங்குகிறார்.
இந்நிலையில், இந்தி ரசிகர்களிடையில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பிக்பாஸ் சீசன் 14-ன் புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு சீசனிலும் பிரம்மாண்டம் அடையும் பிக்பாஸ் வீட்டில், இந்து முறையும் பிரம்மாண்டம் கூட்டப்பட்டுள்ளது.
தமிழ் பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும், சமூக இடைவெளி எப்படி இருக்கும், மாஸ்க் பயன்படுத்துவார்களா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கருத்தில் தெரிவியுங்கள்.