Connect with us

தினபலன்

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (11/09/2020)

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

11-09-2020 

வெள்ளிக்கிழமை

மேஷம்

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் வீண் இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்பட்டாலும்,சக ஊழியர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 2, 3

ரிஷபம்

இன்று கணவன் மனைவிக்கிடையே நல்லுறவு ஏற்படும். குடும்ப உறுப்பினர் உடல்நிலையில் கவனம் தேவை. கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது. பெண்கள் எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கடித போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும். வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

மிதுனம்

இன்று தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபார போட்டிகளில் சாதகமான பலன்களும் லாபங்களும் கிடைக்கும். ஆனாலும் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும்.  

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

கடகம்

இன்று தம்பதிகளுக்குள் தருணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்கள் திறமையாக சமாளித்து எந்த பிரச்சனையிலும் சாதகமான முடிவை பெறுவீர்கள். இழுபறியாக இருந்த காரியங்களில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1,2

சிம்மம்

இன்று நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர் பயணங் களால் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படலாம். செய் தொழிலில் மன நிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும். மேல் அதிகாரிகளின் ஆதரவை உத்தியோகஸ்தர்கள் பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2, 9

கன்னி

இன்று வியாபாரம் தொடர்பான பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம். எதிர்பார்த்த பலன் தாமதப்படும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கலாம். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். அவர்களது திறமைகண்டு மனமகிழ்ச்சி கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். திறமை வெளிப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4, 6

துலாம்

இன்று வாகன லாபம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வீண் அலைச்சலும், செலவும் ஏற்பட்டாலும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். எதிர்பார்த்த  உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6

விருச்சிகம்

இன்று எதிர்பாராத செலவு ஏற்படும். புதிய காரியங்களில் ஈடுபடும் போது யோசித்து  செய்வது நல்லது. மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 2, 9

தனுசு

இன்று  சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அலுவலக வேலைகளால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடம் அலுவலகம் தொடர்பான ரகசியங்களை கூறுவதை தவிர்ப்பது நல்லது. புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9,3

மகரம்

இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் எரிச்சல் ஏற்படுத்துவதாக இருக்கும். அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே  மனம் விட்டு பேசி செயல்படுவது நன்மை தரும். பிள்ளைகள் எதிர்பார்த்தபடி நடந்து கொள்வார்கள்.  தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் குறையக்கூடும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும்

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

 

கும்பம்

இன்று பெண்கள் நண்பர்களிடம் உறவினர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. வீண் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். புதிய செயல்களை யோசித்து செய்வது நல்லது.  பெரியோர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

மீனம்         

இன்று வெளியூர்  பயணங்கள் உண்டாகும், அதனால் நன்மையும் ஏற்படும். நண்பர்கள்  பலவிதங்களிலும் ஆதரவாக இருப்பார்கள். மன தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். கடித போக்குவரத்து மூலம்  அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 5

author avatar
seithichurul
செய்திகள்31 நிமிடங்கள் ago

ராக்ஷாபந்தன் எதிரொலி விமான டிக்கெட் கட்டணங்கள் 46% வரை உயர்வு!

பிற விளையாட்டுகள்1 மணி நேரம் ago

பாரிஸ் ஒலிம்பிக் 2024: ஜூலை 28, 2024 – இந்தியாவின் முழு அட்டவணை

பர்சனல் ஃபினான்ஸ்2 மணி நேரங்கள் ago

இந்தியாவில் உள்ள மூத்த குடிம்மக்களுக்கான இந்த 8 நிதி நலன்கள் பற்றி எல்லாம் தெரியுமா?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேரளா சிப்ஸ்: இனி வீட்டிலேயே சுவையாக செய்து சாப்பிடலாம்!

சிறு தொழில்2 மணி நேரங்கள் ago

இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிப்பது எப்படி? 5 எளிய வழிகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

கடன் தொல்லையா? இன்று ஆடி அஷ்டமி! பைரவருக்கு இந்த விளக்கேற்றி வழிபடுங்கள்!

சினிமா2 மணி நேரங்கள் ago

தனுஷின் ‘ராயன்’, இரண்டு நாளில் ரஜினியின் ‘லால் சலாம்’ வசூலை முறியடித்தது!

heart attack
ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

மாரடைப்பு ஏற்படும் முன் தெரியும் அறிகுறிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ரூ.1,00,000/- ஊதியத்தில் TIDCO -ல் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

வாழைத்தண்டு வித்தியாசமான சுவை! ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி!

பல்சுவை6 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

ஆனந்த் அம்பானி திருமண பரிசுகள்: பிரைவேட் ஜெட் முதல் ஃபாரின் பங்களா வரை!