வார பலன்
உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (செப்டம்பர் 7 முதல் 13 வரை)
மேஷம்:
எந்த பிரச்சனையானாலும் எளிதில் வெளியே வரும் மனதுடைய மேஷ ராசி அன்பர்களே இந்த வாரம் விருப்பங்கள் கைகூடும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். பண வரத்து குறையும். வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை.
தொழில் வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் இருந்த தாமதம் நீங்கும். பார்ட்னர்களிடம் இருந்து வந்த மனக்கிலேசல்கள் மாறும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தக்க பலன் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும்.
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். ஆனாலும் கவனமாக எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக இருப்பதும் அன்பாக பேசுவதும் நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகும் போது கவனம்தேவை.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் திடீர் தடை, தாமதம் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரியோர், ஆசிரியர் அரவணைப்பு இருக்கும்.
பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
****************************************************************************************************************************************************
ரிஷபம்:
தனக்கு வேண்டியவை எப்படியாவது நிறைவேற்றிக்கொள்ளும் ரிஷப ராசி அன்பர்களே இந்த வாரம் தேவையற்ற மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம்.
தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். போட்டிகள் குறையும். எதிர்பார்த்த ஆர்டர் வரும். பணவரத்து திருப்தி தரும். கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். மேல் அதிகாரிகள் ஒத்துழைப்பும் இருக்கும்.
குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சனையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்க காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மதிப்பு கூடும்.
பெண்கள் எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும் பயணங்களின் போது கவனம் தேவை.
மாணவர்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டு படிப்பது நல்லது. வகுப்பில் கவனத்தை சிதற விடாமல் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்கி வர துன்பங்கள் விலகி இன்பங்கள் தேடி வரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.
**************************************************************************************************************************************************
மிதுனம்:
எதையும் தைரியமாக சந்திக்கும் மிதுன ராசி அன்பர்களே இந்த வாரம் திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை. மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம்.நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.
தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகள் நீங்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். புதிய ஆர்டர்கள் பிடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பொருளாதார உயர்வு உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். அரசாங்க ரீதியிலான காரியங்கள் மிகச்சிறப்பாக இருக்கும்.
குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனக்கசப்பு மாறும். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதன் மூலம் அவர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். மனநிம்மதி உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.
பெண்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த தகராறுகள் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.
பரிகாரம்: அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று 11 முறை வலம் வந்து வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள் பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி.
****************************************************************************************************************************************************
கடகம்:
தனிமையை அதிகமாக விரும்பும் கடக ராசி அன்பர்களே நீங்கள் எதிர்ப்பவர்களை தக்க சமயத்தில் வெற்றி கொள்வீர்கள். இந்த வாரம் மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கெட்ட கனவுகள் தோன்றலாம். நட்பாக இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம்.
தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது.
குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளை களை அவர்களின் போக்கிலேயே விட்டு பிடிப்பது நன்மை தரும்.
பெண்கள் மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக செயல்படுவது நல்லது.
மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு காணப்படும். மிகவும் கவனமாக படிப்பது கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
பரிகாரம்: அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்குச் சென்று வில்வ அர்ச்சனை செய்து வணங்க எல்லா தொல்லைகளும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் நன்றாக நடக்கும்
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி
.****************************************************************************************************************************************************
சிம்மம்:
அனைவரிடமும் கவனமாக பேசக்கூடிய சிம்ம ராசி அன்பர்களே நீங்கள் ஊக்கமுடன் உழைக்க தயங்காதவர்கள். இந்த வாரம் எதிர்பாராத செல்வ சேர்க்கை உண்டாகும். அதே நேரத்தில் மனதில் வீண்கவலையும் ஏற்படலாம். எதிலும் ஒரு வேகம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடும் போது கவனம் தேவை. உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம் எதிலும் அளவுக்கு மீறாமல் இருப்பது நல்லது. ஆடம்பர பொருட்கள் சேரும்.
தொழில் வியாபாரம் மிதமாக இருக்கும். எதிர்பார்த்த பணவரத்து தாமதப்பட்டாலும் கைக்கு வந்து சேரும். தொழில், வியாபாரம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும். உங்களது பேச்சு திறமையால் மேலிடத்தில் இருப்பவர்களிடம் நல்ல பெயர் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.
குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஏதாவது குறை கூறுவார்கள். அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே தேவையில்லாத விஷயத்தால் மன வருத்தம் ஏற்படலாம் கவனம் தேவை. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள்.
பெண்களது செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள். திறமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். செலவுகளை குறைப்பது நன்மை தரும்.
மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.
பரிகாரம்: அருகில் இருக்கும் காவல்தெய்வத்தை வணங்க மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி
****************************************************************************************************************************************************
கன்னி:
நிர்வாகத்தில் நியாமாக நட்ந்துகொள்ளும் கன்னி ராசி அன்பர்களே நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். இந்த வாரம் மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும். எதிலும் தாமதமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் விலகும்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை.
உத்தியோகத்தில் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.
குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பழி ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வரலாம். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. ஆயுதங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை.
பெண்கள் தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். தேவையான உதவி கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் திறமை வெளிப்படும்.
பரிகாரம்: கோபூஜை செய்து பசுவை வணங்க குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனி
****************************************************************************************************************************************************
துலாம்:
அத்தியாவசிய செலவுகளை மட்டும் செய்ய நினைக்கும் துலா ராசி அன்பர்களே இந்த வாரம் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சுபகாரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். நெருக்கமானவர்களுடன் பேசி மகிழ்வீர்கள். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஆக்கபூர்வமான செயல் களை மேற்கொண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம். வியாபாரத்திற்கென்று புதிதாக இடம் வாங்குவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கூறிய பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
குடும்பத்தில் நிம்மதி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் செயல்திறன் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
பெண்களுக்கு மனதில் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். பயணங்களின் போதும் வாகனங்களை பயன்படுத்தும் போதும் கவனம் தேவை.
மாணவர்கள் கல்வியில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நன்மை தரும்.
பரிகாரம்: ஆறுமுகனை வணங்க எதிர்ப்புகள் நீங்கும். கஷ்டங்கள் குறையும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
****************************************************************************************************************************************************
விருச்சிகம்:
மனிதர்களின் குணங்களுக்கு தகுந்தார் போல் அவர்களிடம் வளைந்துக்கொடுத்து போகும் விருச்சிக ராசி அன்பர்களே நீங்கள் இறை நம்பிக்கை அதிகம் உடையவர்கள். இந்த வாரம் வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள்பணவரவு மன திருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். லாபம் கூடும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள்.
பெண்களுக்கு எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனகுழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.
பரிகாரம்: குருபகவானை வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கி சுகம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி
****************************************************************************************************************************************************
தனுசு:
பகைவரானாலும் அவர்களுக்கு தகுந்த மரியாதை அளிக்கும் தனுசு ராசி அன்பர்களே இந்த வாரம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். சரக்குகளை கையாளும் போது கவனம் தேவை.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். வேலைகளை செய்து முடிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். புதிய பதவி கிடைக்கலாம். மேலிடத்தின் மூலம் அனுகூலம் கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்க பெறலாம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பது மன மகிழ்ச்சியை தரும். நினைத்ததை நடத்தி முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சொத்துப் பிரச்சினை தீர்வு பெறும்.
பெண்கள் எந்த காரியத்தை செய்து முடிப்பதிலும் வேகத்தை காண்பீர்கள். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றிய எண்ணம் மேலோங்கும். அது தொடர்பான பணிகளில் ஈடுபடுவீர்கள்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வெற்றிலை மாலை போட்டு வணங்க எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். மனதில் தைரியம் கூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
****************************************************************************************************************************************************
மகரம்:
தெளிவான சிந்தனைகள் கொண்ட மகர ராசி அன்பர்களே இந்த வாரம்தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும்.
தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரத்து தடைபட்டாலும் வந்துசேரும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது கவனம் தேவை.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. இயந்திரங்களில் பணி புரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது செயல்படுவது அவசியம்.
குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்து பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக் கிடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது.
பெண்களுக்கு கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு உண்டாகலாம்.
மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும்
பரிகாரம்: சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி
****************************************************************************************************************************************************
கும்பம்:
அறிவு நிறைந்திருந்தாலும் கூச்சம் இருக்கும் கும்ப ராசி அன்பர்களே இந்த வாரம் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள்.
தொழில் வியாபாரததில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் குறையும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம்.
குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள்.
பெண்களுக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக் கவலை நீங்கி நிம்மதி உண்டாகும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.
****************************************************************************************************************
மீனம்:
குடும்பத்தாரின் மீது பற்றுள்ளவராக இருக்கும் மீன ராசி அன்பர்களே, நீங்கள் விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலம் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். இந்த வாரம் செலவு அதிகரிக்கும். சாதகமான பலன் வரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கூடுதல் கவனம் தேவை. எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். வாக்கு வன்மையால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆடர் தொடர்பாக பயணங்கள் செல்ல நேரலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சக ஊழியர்களுடன் எளிதில் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் அதிகரிக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களுக்காக உழைக்க வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மோதல்கள் குறையும்.
பெண்களுக்கு கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். திறமையுடன் செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சாதுரியமான பேச்சால் நன்மை கிடைக்க பெறுவீர்கள்.
பரிகாரம்: செவ்வாய், துர்க்கை அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனி
**********************************************************************************************************