பர்சனல் ஃபினான்ஸ்
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு!
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 30 வரை, வருமான வரி துறை நீட்டித்துள்ளது.
2019-2020 நிதியாண்டுக்கான வருமான வரி ஜூலை 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். ஆனால் கொரோனா ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2019-2020 நிதியாண்டுக்கான வருமான வரி சேமிப்பு முதலீடுகளைச் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு ஜூலை 31-ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.
எனவே 2019-2020 நிதியாண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளனர்.