வணிகம்
இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.496 சரிவு!
தமிழகத்தில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 496 ரூபாய் குறைந்துள்ளது.
நேற்றும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராம் சவரனுக்கு 37,472 ரூபாய் என்று விற்பனை செய்யப்பட்டது, இன்று காலை 406 ரூபாய் குறைந்த நிலையில், மாலை நிலவரப்படி 496 ரூபாய் குறைந்தது சவரன் ஆபரணத் தங்கம் 36,976 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 4,622 ரூபாய் ஆகும்.
24 காரட் சுத்த தங்கம் கிராம் 4856 ரூபாய் எனவும், சவரன் 38,8848 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று ஒரு கிராம் வெள்ளி விலை 52.90 ரூபாய் எனவும், கிலோ 52,900 ரூபாயாகவும் விற்பனையாகிறது. நேற்று இதுவே 54,700 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.