வணிகம்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து மூன்று மாதங்கள் சரிந்து வந்த நிலையில், ஜூன் மாதம் மானியம் இல்லா சமையல் சிலிண்டர் விலை 37 ரூபாய் அதிகரித்துள்ளது.
எனவே சென்னையில் மானியமில்லா 14.2 கிலோ சமையல் எரிவாய் சிலிண்டர் விலை 606.60 ரூபாய் எனவும், டெல்லியில் 593 ரூபாய் எனவும், கொல்கத்தாவில் 616 ரூபாய் எனவும், மும்பையில் 590 ரூபாய் எனவும் ஜூன் மாதம் விற்பனை செய்யப்படுகிறது.
19 கிலோ எடை உடைய வணிக சமையல் சிலிண்டர் சென்னையில் 1254 ரூபாய், டெல்லியில் 1139.50 ரூபாய், கொல்கத்தாவில் 1193.50 ரூபாய், மும்பையில் 1087.50 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகிறது.