சினிமா செய்திகள்
என் வாழ்க்கையில் ஒருவர் இருக்கிறார், பெற்றோருக்கு அது தெரியும்; காதல் பற்றி அறிவித்த டாப்ஸி!
தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக ஆடுகளம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி.
தற்போது பாலிவுட் திரைப்படங்களில் பிஸியாக உள்ள டாப்ஸி தனது காதல் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், “நான் எதையும் யாரிடமும் மறைத்ததில்லை. என் வாழ்க்கையில் ஒருவர் இருக்கிறார் என பெருமையாகவே சொல்ல விரும்புகிறேன். இது என் பெற்றோருக்கும் தெரியும். என் பெற்றோர், சகோதரி ஆகியிருக்கும் எனது காதலரை பிடிக்க வேண்டும். இல்லை என்றால் நன்றாக இருக்காது” என்று கூறியுள்ளார்.
32 வயதான டாப்ஸி டென்மார்க்கை சேர்ந்த மத்தியாஸ் போ என்ற பேட்மிட்டன் விளையாட்டு வீரரை காதலிக்கிறார் என்று கூறப்படுகிறது.
டாப்ஸியின் காதல் குறித்து பேசிய அவரது தாய், “டாப்ஸி யாரை தேர்வு செய்தாலும், அதில் எங்களுக்கு சம்மதமே என்று தெரிவித்துள்ளார்.