சினிமா செய்திகள்
கைவிட்ட கோலிவுட்.. ஆதரவு அளிக்கும் பாலிவுட்!
கொரோனா ஊரடங்கு காரணமாகத் தயாரிப்பு பணிகள் முடிந்த பல திரைப்படங்களை அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் போன்ற இணையதள OTT பிளாட்ஃபார்ம்களில் படத்தை வெளியிட ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகின்றன.
கோலிவுட்டில் சூர்யாவின் 2டி தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தால் படத்தை இப்படி அமேசான் பிரைமில் வெளியிட முயன்றதற்குத் திரை அரங்குகள் தரப்பிலிருந்து எதிர்ப்பும், தயாரிப்பாளர்களிடம் இருந்து வரவேற்பும் பெற்றன.
புதிய படங்களை நேரடியாக OTT ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியிட கோலிவுட்டில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், பாலிவுட் அதை வரவேற்றுள்ளது.
தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக் லக்ஷ்மி பாம்ப் ஆன்லைனில் நேரடியாக வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் அமிதாப் பச்சன் நடிப்பில் ரிலீஸூக்கு தயாராக உள்ள குலாபோ சீதாபோ படமும் ஆன்லைனில் நேரடியாகப் பேச்சுவார்த்தையில் உள்ளது.
டி-சீரிஸ் நிறுவனமும் தங்களது தயாரிப்பில் தயாராக உள்ள படங்களை நல்ல விலை கிடைத்தால் ஆன்லைனில் நேரடியாக வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தையில் உள்ளது.