சினிமா
நகைச்சுவை நடிகர் கோவை செந்தில் காலமானார்!
கோவை செந்தில் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். எப்படி இறந்தார் என்பது சரியான காரணம் தெரியவில்லை. அவருக்கு வயது 74.
நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களிலேயே இவர் அதிகம் நடித்துள்ளார்.பல படங்களில் சின்னச் சின்ன வேடத்தில் நடித்துள்ளார் கோவை செந்தில்.
குமாரசாமி என்கிற நடிகர் கோவை செந்தில், இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஒரு கை ஓசை, இது நமது ஆளு, ஆராரோ ஆரிரரோ, என் ரத்தத்தின் ரத்தமே, பவுனு பவுனுதான், அவசர போலீஸ் 100, படையப்பா, கோவா உட்பட ஏராளமான படங்கள் நடித்துள்ளார்.
உடல்நல குறைவால் இன்று காலை கோவை வடவள்ளியிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். உடல் கோவையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.