வேலைவாய்ப்பு
தமிழ்நாடு வனத்துறையில் வேலை!
தமிழ்நாடு வனத்துறையில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 320. இதில் வனக் காவலர் வேலைக்கான புதிய அறிவிப்பைத் தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வாணையம் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 320
வேலை: Forest Guard – 227
வேலை: Forest Guard with Driving Licence – 93
கல்வித்தகுதி: அறிவியல் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது: 01.07.2019 தேதியின்படி 21 – 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
மாத சம்பளம்: ரூ.18,200 – 57,900
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: எஸ்சி, எஸ்டி ரூ.150, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் ரூ.300 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.forests.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.forests.tn.gov.in/pages/view/recruitment என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.02.2020