வணிகம்
இன்று முதல் மும்பை மெக் டொனால்ட்ஸ் உணவகங்கள் 24 மணி நேரமும் இயங்கும்!
இன்று முதல் மும்பையில் உள்ள 7 மெக் டொனால்ட்ஸ் உணவகங்கள் 24 மணி நேரமும் இயங்கும் என்று தெரிவித்துள்ளது.
மத்திய அரசு இந்திய நகரங்களில் 24 மணி நேரமும் வணிக வலாகங்களை இயக்க அனுமதி அளித்துள்ளது. இதை முதலில் அமல்படுத்தும் நகரமாக மும்பை உள்ளது.
இதனை வரவேற்கும் விதமாக இன்று முதல் மும்பையில் உள்ள மெக் டொனால்ட்ஸ் உணவகங்கள் 24 மணி நேரமும் இயங்கும்.
ஆனால் மும்பையின் பிரபல இன்ஃபினிட்டி மால், எங்களது மாலில் உள்ள உணவகங்கள், வார இறுதி நாட்களில் காலை மூன்று மணி வரை இயங்கி வருகின்றன. இருப்பினும் இன்னும் 24 மணி நேரமும் திறப்பது குறித்து நாங்கள் எந்த முடிவு எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அறிவித்துள்ள விதிகளின் படி மால்கள், உணவகங்கள் உள்ளிட்ட வணிகங்களை 24 மணி நேரமும் செய்யலாம்.