சினிமா செய்திகள்
‘தமிழ் நடிகர்கள் – தெலுங்கு ஹீரோக்கள்’ டிவிட்டரில் போர்; கடுப்பான சித்தார்த்! (#UnrivalledTamilActors vs #TeluguRealHeroes )
![Siddharth - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/01/Siddharth.jpg)
சமுக வலைத்தளங்களில் இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் இடையில் மோதல் வந்தால், சிலர் மிக கீழ்த்தரமான வார்த்தைகளில் பேசிக்கொள்வார்கள். அதற்கு விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் ஒரு உதாரணம்.
அப்படி இன்று #UnrivalledTamilActors vs #TeluguRealHeroes உள்ளிட்ட டாகுகள் டிவிட்டர் உள்ளிட்ட சமுக வலைத்தளங்களில் டிராண்ட் செய்யப்பட்டு வருகிறது.
இதைப் பார்த்துக் கடுப்பான நடிகர் சித்தார்த், “இன்று தென் இந்திய பைத்தியக்கார ரசிகர்கள் தெலுங்கு ஹீரோக்களா? தமிழ் நடிகர்களா? (#UnrivalledTamilActors vs #TeluguRealHeroes ) என்று மோதிக்கொண்டு இருப்பது வைரலாகி வருகிறது.
ஏன் இணையதளத்தை இப்படி வீண் செய்கிறார்கள்! இணையதள தரவுகளை வைத்து இந்த இளம் தலைமுறையினர் வாழ்க்கைக்குத் தேவையான நன்மையை செய்துகொள்ள வேண்டும் என்று இந்த நாடு நினைக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Today’s #Paithyam challenge in South Indian fans clashing trends is #UnrivalledTamilActors vs #TeluguRealHeroes
????????♂️????????♂️????????♂️
What a waste of the internet! Our country really needs these youngsters to do more with their lives, and their internet data!
— Siddharth (@Actor_Siddharth) January 22, 2020
இது குறித்த உங்கள் கருத்துக்களை நீங்கள் கருத்துக்களாகத் தெரிவிக்கவும்.