சினிமா செய்திகள்
மூச்சுத் திணற திணற பாக்சிங் டிரெயினிங்; மீண்டும் வைரலாகும் சிம்பு படம்!
நாற்பது நாள் விரதம் இருந்து, சபரி மலைக்கு சென்று வீடு திரும்பியுள்ளார் சிம்பு.
வீடு திரும்பிய உடன் மூச்சுத் திணறத் திணற பாக்சிங் டிரெயினிங் எடுப்பது போன்ற படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்தை தொடர்ந்து சிம்பு, மாநாடு மற்றும் மஃப்டி ரீமேக் படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.
பின்னர் மாநாடு படத்தில் நடிக்காமல் மஃப்டி படத்தில் நடிக்க சென்றுவிட்டார். இதனால் மாநாடு படத்தில் இனி சிம்பு நடிக்க மாட்டார் என்று சுரேஷ் காமாட்சி தெரிவித்தார்.
தொடர்ந்து, மஃப்டி படப்பிடிப்பிற்கும் சிம்பு வருவதை தவிர்த்து வந்தார். உடனே மஃப்டி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அந்த படத்தை தான் டிராப் செய்வதாக அறிவித்தார்.
தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிம்பு மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அக்ரிமெண்ட்டில் கையெழுத்திட்டுள்ளதாகவும், ஜனவரி 16-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் மஃப்டி படத்தின் நிலை என்ன என்பது தெரியவில்லை.