வேலைவாய்ப்பு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் வேலை!
![cbse - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/11/cbse.jpg)
சிபிஎஸ்இ என அழைக்கப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 357. இதில் இளநிலை உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 357
வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:
வேலை: Assistant Secretary – 14
வேலை: Assistant Secretary (IT) – 07
மாத சம்பளம்: ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.6,600
வேலை: Analyst (IT) – 14
மாத சம்பளம்: ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.5,400
வேலை: Junior Hindi Translator – 08
மாத சம்பளம்: ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வேலை: Senior Assistant – 60
வேலை: Stenographer – 25
வேலை: Accountant – 06
மாத சம்பளம்: ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400
வேலை: Junior Assistant – 204
வேலை: Junior Accountant – 19
மாத சம்பளம்: ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,900
கல்வித்தகுதி: ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம், பொறியியல் துறையில் ஐடி பிரிவில் பிஇ அல்லது பி.டெக், எம்சிஏ, எம்.எஸ்சி(ஐடி), ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு எம்.ஏ (இந்தி) முடித்தவர்கள், பிளஸ் 2 முடித்து தட்டச்சு தகுதி பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது: 27 – 40 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: குரூப்-ஏ வேலைகளுக்கு ரூ.1,500, குரூப்-பி மற்றும் சி வேலைகளுக்கு ரூ.800 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள், சிபிஎஸ்இ பணியாளர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.cbse.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://cbse.nic.in/newsite/attach/Final%20Advertisement%2015112019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.12.2019