Connect with us

தினபலன்

உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (16/11/2019)

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

16-Nov-19

சனிக்கிழமை

மேஷம்:

இன்று மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வது போல் செயல்பட்டாலும் இறுதியில் நீங்கள் நினைத்ததையே செய்யும் குணமுடையவர்கள். காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும். ஏதாவது மனகவலை இருக்கும். எதிலும் சாதகமான போக்கு காணப்படும். துணிச்சலாக சில முக்கய முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தடை தாமதம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

ரிஷபம்:

இன்று தொழில் வியாபாரத்தில் சிறு தடங்கல்கள் சந்திக்க நேரும். எதிர்பார்த்த பணம் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகள் நல்லபலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சிலர் புதியவேலைக்கு முயற்சி மேற்கொள்வார்கள்.குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 9

மிதுனம்:

இன்று எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கடகம்:

இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்கொள்வீர்கள். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள். அதிக நினைவுத்திறனும் எதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் உடையவர்கள். வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். புதிய வகுப்புகளில் சேர ஆர்வம் காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

சிம்மம்:

இன்று பயணங்களால் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும். எதிலும் எச்சரிக்கையும் கவனமும் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள். உயர் பதவிகளும் கிடைக்க கூடும்.பணவரத்து தாமதப்படும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9

கன்னி:

இன்று தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவார்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலையை தரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். பெண்களுக்கு எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்குபலமுறை யோசிப்பதுநல்லது. மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

துலாம்:

இன்று .தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும். எந்த ஒரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் இருந்த டென்ஷன் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர் மூலம் நன்மை ஏற்படும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்து சிந்தனை மேலோங்கும். உறவினர்கள், நண்பர்களின் உதவியும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

விருச்சிகம்:

இன்று திறமையாக பேசுவதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். தெளிவான சிந்தனை இருக்கும். அற்ப சிந்தனைகளுக்கு இடம் கொடாமல் தீர்க்கமான எண்ணமுடைய எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்திசாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மனதில் உற்சாகம் உண்டாகும். பணவரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

தனுசு:

இன்று திடீர் கோபம் டென்ஷன் ஏற்படலாம். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. வீண் அலைச்சல், மனக்குழப்பம் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். இழுபறியான காரியங்கள் சாதகமாக முடியும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மகரம்:

இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். முக்கிய முடிவு எடுக்கும் போது தடுமாற்றம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோள் இன்றி வேலை செய்ய வேண்டி இருக்கும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம்.குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலை தூக்கும். மிகவும் கவனமாக கையாண்டால் அது தீரும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

கும்பம்:

இன்று குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவு ஏற்படலாம். கணவன் மனைவிக் கிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்மை தரும். மற்றவர்களுக்காக போராடும் குணமுடையவர்கள் நீங்கள் தன்னம்பிக்கை மிக்கவர். காரியதடை தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்துமுடிப்பீர்கள்.உறவினர்கள் நண்பர்கள் வருகை இருக்கும். பெண்களுக்கு அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மீனம்:

இன்று வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்து செல்வது நல்லது. வியாபார போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும். கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியை கடைபிடிப்பதன் மூலம் எல்லாவற்றிலும் அனுகூலம் உண்டாகும். டென்ஷனை குறைப்பது நல்லது. மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா19 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்19 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!