Connect with us

தினபலன்

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (31/10/2019)

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

31-Oct-19

வியாழக்கிழமை

மேஷம்:

இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வீண் செலவு குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். வர வேண்டிய பணம் வந்து சேரும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

ரிஷபம்:

இன்று அலைச்சல் ஏற்படலாம். அடிக்கடி கனவுகள் வரக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மிதுனம்:

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிøடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருபப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கடகம்:

இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

சிம்மம்:

இன்று உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். காரிய தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். தன்னை தானே உயர்த்தி கொள்வதுடன் பிறரும் உயர பாடுபடுவீர்கள். மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கன்னி:

இன்று முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர் பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

துலாம்:

இன்று அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்தது போல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம். கூடுதல் முயற்சி வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

விருச்சிகம்:

இன்று தடை தாமதம் ஏற்படலாம். வீண் அலைச்சல் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

தனுசு:

இன்று கணவன், மனைவிக்கிடையே இடைவெளி காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவிஷயத்தில் சிக்கனத்தை கடை பிடிப்பீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மகரம்:

இன்று மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். காரிய வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

கும்பம்:

இன்று ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரிய தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை உண்டாகலாம். தந்தை மூலம் செலவு உண்டாகலாம். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மீனம்:

இன்று மனோதைரியம் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களால் செலவு ஏற்படும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். ஆனால் பணியை பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

author avatar
seithichurul
வணிகம்22 மணி நேரங்கள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!