சினிமா செய்திகள்
பிகில் படத்தை விஞ்சிய தளபதி 64 திரைப்பட போஸ்ட்டர்!
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு பிகில் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், தளபதி 64 படத்திற்கான போஸ்ட்டர் வெளியாகியுள்ளது.
ஊடகங்களில் ஏற்கனவே வெளியான தகவல்களின் படி விஜய் சேதுபதி தளபதி 64 நடிப்பதற்கான போஸ்ட்டர் வெளியாகியுள்ளது.
போஸ்ட்டரில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நடிக்கும் தளபதி 64 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, ரசிகர்களின் கவனத்தை அதிகளவில் ஈர்த்துள்ளது. அனிருத் இசை அமைக்க உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
மேலும் மலையாளம் நடிகர் ஆண்டனி வர்கீஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான போஸ்ட்டரும் வெளியாகியுள்ளது.
பொதுவாக ஒரு முன்னணி நடிகரின் திரைப்படத்திற்கு ரிலீஸ் தேதி குறிப்பிட்டுவிட்டால், அவரது அடுத்த திரைப்படத்திற்கான அறிவிப்புகள் ஏதும் வெளியாகாது. ஆனால் விஜய் 64 திரைப்படம் குறித்து தற்போது வெளியாகி வரும் அறிவிப்புகள் தீபாவளியன்று வெளியாக உள்ள பிகில் திரைப்படத்தை விட அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.