Connect with us

சினிமா

நம்ம வீட்டுப் பிள்ளை விமர்சனம்… வெற்றிக்காக காத்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு உதவியதா இல்லையா..?

Published

on

சொந்தங்கள் எல்லாம் பெரிய பணக்காரர்களாக இருக்கும்போது அப்பா இல்லாத ஒரு ஏழை குடும்பம், அதை முன்னெடுத்துக் காப்பாற்றும் மூத்த ஆண்பிள்ளை கதாநாயகன், திருமணம் ஆகாததற்கு ஒரு காரணத்தோடு இருக்கும் திருமணம் ஆகாத தங்கை, அதையே நினைத்து வருந்திக்கொண்டிருக்கும் அம்மா. வசதியான மாமா பொண்ணு, தங்கையை கட்டிக்கொள்ளும் ஊரில் ரவுடியாக சுற்றும் மாப்பிள்ளை, அந்த மாப்பிள்ளைக்கும் கதாநாயகனுக்கும் இடையே சின்ன சின்ன பிரச்னை. இவற்றை எல்லாம் சமாளித்து தன் தங்கையின் வாழ்க்கையை சரி செய்ய போராடும் கதாநாயகனின் கதைதான் இந்த நம்ம வீட்டுப் பிள்ளை.

இவ்ளோ சுத்த தேவை இல்லை. அப்பா இல்லாத தங்கையை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்கும் அண்ணன், அந்த ஊரில் ரவுடியாக சுற்றும் வில்லனுக்கு தங்கையை திருமணம் செய்து வைக்கும் சூழல் உருவாகிறது. அதன்பின் தங்கையை கொடுமைப்படுத்தும் வில்லனிடம் இருந்து தன் தங்கை வாழ்க்கையை எப்படி காப்பாற்றினான் சிவகார்த்திகேயன். இதற்கிடையே பணம் இல்லாததால் சொந்தங்கள் எல்லாம் வெறுத்துவரும் சூழலில் அவர்களது அன்பையும் எப்படி பெற்றார் என்பதை சொல்லியிருக்கும் கதை தான் நம்ம வீட்டுப் பிள்ளை. இந்தக் கதையை கேட்கும்போது இதேபோல பல ஆயிரம் கதைகள் பார்த்து கேட்டு பழக்கப்பட்ட கதைதான்.

பெரும்பாலும் உலக, இந்திய சினிமாக்களில் கதைகள் எல்லாம் சில நான்கு வகைக்குள் அடங்கிவிடும். அவை எப்படி காட்சிப்படுத்துப்படுகின்றன என்பதில்தான் அதன் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த நம்ம வீட்டுப் பிள்ளை வெற்றி பெற்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

கடைக்குட்டி சிங்கத்தின் வெற்றியை அடுத்து அதே வகையில் சில மாற்றங்களை செய்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாண்டியராஜ். நினைத்தது போலவே அது அவருக்கு வெற்றியைக் கொடுத்திருக்கிறது, ரஜினிமுருகனுக்கு அடுத்து பெரிய வெற்றி இல்லாமல் தவித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு கொஞ்சம் நின்று மூச்சு விட்டுக்கொள்ள வாய்ப்புக் கொடுத்துள்ளது இந்தப் படம். சூரிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் காமெடியில் ஒரு பெரிய கெமெஸ்ட்ரி இருக்கும். அதை வைத்துதான் இருவரும் பல வெற்றி படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இந்தப் படத்தில் அது கொஞ்சம் மிஸ்ஸிங். இருவரும் இணைந்துவரும் காட்சிகள் இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம் எனலாம். அதே நேரத்தில் சூரியின் மகனாக நடித்திருக்கும் பையனின் கமென்ட்ஸ். ட்ரைலரிலேயே ஒரு கமெண்ட் வரும். லவ்வு… லவ்வு… என்று. அதே மாதிரியான சின்ன கமெண்ட்ஸை ஆங்காங்கே தெளித்து விட்டுள்ளார். நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

தங்கையாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் நன்றாக நடித்திருக்கிறார் என்றாலும் இனி எல்லா படங்களிலும் அவரை தங்கையாகவோ அக்காவாகவோ நடிக்க வைத்து அவரது திரை வாழ்க்கையை அழித்துவிடுவார்களே என்று நினைக்கும்போதுதான் கொஞ்சம் திக் என்று இருக்கிறது. தாத்தாவாக பாரதிராஜா, விறைப்பான பெரியப்பாவாக வேலராமமூர்த்தி, வில்லனாக ஆடுகளம் நரேன், நடராஜன், எழுத்தாளர் வசுமித்ரன் என பெரிய நடிகர் பட்டாளமே வழக்கமான அவர்கள் பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.

கதாநாயகியாக அறிமுகம் ஆகியுள்ள அனு இமானுவேல் பார்க்க அழகாக இருக்கிறார். என்ன நடிக்கவும் ஆடவும் கொஞ்சம் சிரமப்படுகிறார். போகப் போக எல்லாம் சரியாகிவிடும். இமான் வழக்கமான இசை. பாடல்கள் எல்லாம் முன்னரே கேட்டவைதான்.

பேசியே சினிமாவுக்கு வந்தவர் என்பதால் சிவகார்த்திகேயன் பேசிக்கொண்டே இருக்கிறார். சண்டை, சோகம், காதல் என எல்லா இடத்திலும் பேசிக்கொண்டே இருக்கிறார் சிவா. கனமே இல்லாத் ஒரு பிளாஸ் பேக் வேற… இவற்றை எல்லாம் கொஞ்சம் குறைத்திருந்தால் படமும் இன்னும் கொஞ்சமும் குறைந்து இருக்கும். பிற்பாதி அலுப்பை தவிர்த்திருக்கலாம்.

பார்த்து பழக்கப்பட்ட கதைதான் என்றாலும் பல இடங்களில் பார்வையாளர்கள் தங்களது வாழ்க்கையோடு இணைத்துக்கொள்கிறார்கள். குடும்பப் பிரச்னைகள் இல்லாத எவரும் இல்லை. அதை சரியான அளவில் கொடுத்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்பதை நன்றாக உணர்ந்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். அதை சிவகார்த்திகேயனுக்கு ஏற்றார்போல மாற்றி வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். வழக்கமான பதில்தான் என்றாலும் விமர்சன, புத்திசாலி மூளைகளை கழட்டி வைத்துவிட்டு ஒரு குடும்பஸ்தனாக சென்று பார்த்தால் நிச்சயம் நம்ம வீட்டுப் பிள்ளை உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். காசுக்கு பங்கம் இருக்காது….

பி.கு. நிறைய கதாபாத்திரங்கள் இருப்பதால் முக்கிய பாத்திரங்கள் மட்டும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன…

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்21 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா10 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்10 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்