கிரிக்கெட்
டி20 கிரிக்கெட் போட்டியில் அஃப்ரீடி செய்த சாதனையை முறியடித்த மலிங்கா!
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா, டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைச் செய்துள்ளார்.
முன்னதாக 99 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 98 வீக்கெட்களை வீழ்த்தி, அதிக டி20 விகெட்களை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை அஃப்ரீடி வைத்திருந்தார்.
தற்போது 36 வயதான இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 2 விக்கெட்களை வீழ்த்தி 99 விக்கெட்களுடன் அஃப்ரீடியின் சாதனையை முறியடித்துள்ளார்.
இதுவரை லசித் மலிங்கா 74 டி20 போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.