சினிமா செய்திகள்
இன்னொரு பாகுபலியா சைரா? அசத்தும் சைரா டீசர்!
ராம்சரண் தயாரிப்பில் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் டோலிவுட் சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா படத்தின் புதிய டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் இந்த டீசர் வெளியாகி இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.
முதல் சுதந்திர போராட்ட வீரன் சைரா நரசிம்ம ரெட்டி என்ற சுதந்திர போராட்ட வீரன் குறித்த கதையை படக்குழு உருவாக்கியுள்ளனர்.
இந்த படத்தில் அமிதாப் பச்சன், நயன்தாரா, விஜய் சேதுபதி, சுதிப், தமன்னா என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
படத்தில் இடம்பெற்றுள்ள ஆக்ஷன் மற்றும் போர் காட்சிகள் வெளிநாடுகளில் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது. டீசரை பார்ப்பவர்கள் டோலிவுட்டில் உருவாக்கப்பட்ட இன்னொரு பாகுபலி என்றே புகழ்ந்து வருகின்றனர்.
அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்திக்கு இந்த படம் ரிலீசாகிறது.