சினிமா செய்திகள்
சங்கத்தமிழன் படத்தின் டீசர் நாளை வெளியீடு!
விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படத்தின் டீசர் நாளை 10.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள் ளது.
விஜய்சந்தர் இயக்கத்தில், பாரதி ரெட்டி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் சங்கத்தமிழன். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். இவருடன் இணைந்து ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், சூரி, நாசர், ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு விவேக் – மெர்வின் இசையமைக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் டீசர் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை காலை 10.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.