சினிமா செய்திகள்
த்ரில்லர் படத்தில் கீர்த்தி சுரேஷ்!
சர்கார் படத்திற்கு பிறகு எந்த தமிழ் படத்திலும் ஒப்பந்தமாகாத கீர்த்தி சுரேஷ் தற்போது ஒரு தமிழ் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் அவரது உதவி இயக்குனரான ஈஸ்வர் கார்த்திக் இயக்கும் புதிய படத்தில் தான் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். பெயரிடப்படாத இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் முதல்கட்ட படப்பிடிப்பை கொடைக்கானலில் எடுக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சில நாட்களாக தமிழ் சினிமாவில் காணாமல் போன கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.