Connect with us

சினிமா

முட்டிக்கிச்சு, முட்டிக்கிச்சு: சாண்டிக்கும் வனிதாவுக்கும் முட்டிக்கிச்சு!

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் மூன்று தற்போது நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய புரோமோவில் பிக் பாஸ் வீட்டில் முகின், அபிராமி பிரச்சனை வெடித்துள்ளது. இதில் வனிதாவுக்கும் சாண்டிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் வீடு நேற்று பிக் பாஸ் ஹோட்டலாக மாற்றப்பட்டது. இதில் சிறப்பு விருந்தாளியாக மீண்டும் அங்கு நுழைந்தார் வனிதா. இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா மீண்டும் அங்கு விருந்தினராக சென்றுள்ளது நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது. அதிரடிகளுக்கு பெயர்போன வனிதா வந்த உடனே தனது அதிரடிகளை ஆரம்பித்துவிட்டார். நேற்றைய தினம் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களை ஒவ்வொருவராக தனது கேள்விகளால் வனிதா கலங்கடித்தார்.

இந்நிலையில் இன்று வெளியான புரோமோவில் அபிராமியை அழைத்து பேசும் வனிதா முகின் குறித்து பேசுகிறார். அப்போது சில அட்வைஸ் வழங்கும் வனிதா முகின் குறித்து சில விஷயங்களை அபிராமியிடம் கூறி பற்றவைக்கிறார். இதனையடுத்து ஹாலில் அனைவரும் இருக்கும் போது அபிராமிக்கும் முகினுக்கும் இடையே சண்டை ஆரம்பிக்கிறது.

இந்த சண்டையின் போது மிகவும் ஆவேசமாக பேசும் அபிராமி ஒரு கட்டத்தில் தன்னிலை மறந்து முகினை வாடா போடா என மரியாதையில்லாமல் பேச ஆரம்பிக்கிறார். இதனால் உடனடியாக கோபப்படும் முகின் வழக்கம் போல சத்தம் போட்டுக்கொண்டு தான் இருந்த சேரை தூக்கி அபிராமியை அடிக்க பாய்கிறார். இதனால் பதற்றமான மற்ற போட்டியாளர்கள் அவரை பிடித்து சமாதானம் செய்ய முயல்கின்றனர்.

இதற்கு அடுத்த புரோமோவில் முகினிடம் ஆண் போட்டியாளர்கள் உன்னுடைய வீக்னெஸ்ச பயன்படுத்துரா அவ என அறிவுரை கூறுகின்றனர். அப்போது அந்த இடத்தில் வனிதாவும் இருந்தார். அப்போது வனிதாவிடம் சாண்டி, நேத்து என்னயா சொன்ன என கேட்கிறார். அதற்கு அவர் ஒரு நிமிஷம் என கூற, சாண்டி பதிலுக்கு என்னாத்த ஒரு நிமிஷம் இரு, இல்ல புரில எனக்கு, நோண்டி நோண்டி என வனிதாவை குற்றம் சாட்டுகிறார் இதனால் வனிதாவுக்கும், சாண்டிக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இத்தனை நாள் அனைத்து சண்டையையும் வேடிக்கை பார்த்து வந்த சாண்டி தற்போது முதன்முறையாக வனிதாவிடம் தட்டிக்கேட்டு பிரச்சனை செய்கிறார்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (20/10/2024)

வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்3 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)