சினிமா செய்திகள்
இயக்குனர் சிவாவின் பிறந்தநாள் ட்ரீட்! குஷியில் சூர்யா ரசிகர்கள்!
![Siva - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/08/Siva.jpg)
சிறுத்தை படத்தை இயக்கி வெற்றி கொடுத்த சிவா, அடுத்து தல அஜித்தை வைத்து தொடர்ச்சியாக 4 படங்களை இயக்கினார். தம்பி கார்த்திக்கை வைத்து இயக்கிய சிவா, தற்போது அண்ணன் சூர்யாவை வைத்து அவரது 39வது படத்தை இயக்கவுள்ளார்.
சிறுத்தை சிவாவின் பிறந்த நாளான நேற்று மாலை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ட்விட்டரில் வெளியானது.
சூரியா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்த மாதம் செப்., 20ம் தேதி காப்பான் ரிலீசாகிறது. மேலும் இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்திலும் நடித்து வரும் சூர்யா, அடுத்ததாக சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்கு இமான் இசையமைக்க உள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.