சினிமா செய்திகள்
நம்ம வீட்டு பிள்ளையாக மாறிய சிவகார்த்திகேயன்!
![EBwUZigUEAIif1N - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/08/EBwUZigUEAIif1N.jpg)
பாண்டியராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு நம்ம வீட்டு பிள்ளை என பெயர் சூட்டப்பட்டு அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படம் தான் நம்ம வீட்டு பிள்ளை. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் தலைப்பும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியாகியுள்ளது. வேட்டி சட்டையுடன் கையில் ஒரு கடப்பாறை ஆயுதத்துடன் கிராமத்து லுக்கில் சிவகார்த்திகேயன் மாஸ் காட்டுகிறார்.
எம்.ஜி.ஆரின் எங்க வீட்டு பிள்ளை பட டைட்டிலை கேட்டு காத்திருந்த படக்குழுவுக்கு அந்த பெயர் கிடைக்கவில்லை என்பதால், நம்ம வீட்டு பிள்ளை என பெயரை மாற்றியுள்ளனர்.