சினிமா செய்திகள்
140 கோடிக்கு புது வீடு வாங்கும் பிரியங்கா சோப்ரா!
அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்ட இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா, லாஸ் ஏஞ்சல்சில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஆடம்பர வீட்டில் குடியேறினார். இது நிக் ஜோனசுக்கு சொந்தமான வீடு. இதன் மதிப்பு ரூ.50 கோடி ஆகும். இந்த வீடு ஐந்து படுக்கை அறைகள், ஐந்து குளியல் அறைகள், ஒரு நீச்சல் குளம், இரவு விருந்து நிகழ்ச்சிக்கு தனி பகுதி என்று பிரம்மாண்டமான வீட்டில் வசித்து வருகிறார்.
இப்போது அதை விட மிக பிரம்மாண்டமான ஒரு வீட்டை அதே பெவர்லி ஹில்ஸ் பகுதியில் 140 கோடி ரூபாய்க்கு பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் தம்பதியினர் வாங்க முடிவு செய்துள்ளனராம்.
ஹேப்பினஸ் பிகின்ஸ் எனும் இசை சுற்றுலாவுக்கு நிக் ஜோனஸ் தனது ஜோனஸ் சகோதரர்களுடன் செல்ல உள்ளதால், தற்போது வாங்க போகும் புது வீட்டில், இன்டீரியர் டிசைன் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். அடுத்த ஆண்டு இந்த புதிய வீட்டுக்கு குடியேறுவார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.