சினிமா செய்திகள்
இந்தியன் 2 படத்தில் இணையும் பிரியா பவானிஷங்கர்!
இயக்குனர் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் பிரியா பவானிஷங்கர்.
கமல், காஜல் அகர்வால் நடிக்கும் இந்தியன் 2 படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்திக்கொண்டே வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் ஷங்கரை சந்தித்த பிரியா தன்னைப் பற்றி அவரிடம் கூறியதாகவும், 2மணி நேரம் பேசிய பிறகு படத்தில் நடிக்க ஏற்கப்பட்டதாகவும், இந்த வாய்ப்பை தான் இழக்க விரும்பவில்லை என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படம் அடுத்த வருடம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.