வேலைவாய்ப்பு
ரெப்கோ வங்கி வேலை!
ரெப்கோ வங்கியில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 03. இதில் உதவி மேலாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
வேலை: Assistant Manager
காலியிடங்கள்: 03
மாத சம்பளம்: ரூ.45,000
வயது: 24 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Information Technology, Computer Application பிரிவில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்று 2 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு நடைபெறும் இடம்: சென்னை
கட்டணம்: ரூ.708. இதனை Repco Bank Recruitment cell என்ற பெயருக்குச் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.repcobank.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அதனுடன் விண்ணப்பக் கட்டணத்திற்கான டி.டி மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager (Admin), Repco Bank Ltd., P.B.No.1449, Repo Tower, No.33, North Usman Road, T,Nagar, Chennai – 600 017.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.repcobank.com/uploads/career/2.a.%20Notification%20for%20Assistant%20Manager%20(Scale%20I)%20-%20Information%20Technology.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 13.08.2019