சினிமா
அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்!
நடிகர் அஜித் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இந்த படம் வரும் 8-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதன் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளார்.
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவாகியது நேர்கொண்ட பார்வை திரைப்படம். இந்த படத்தில் அஜித் வக்கீலாக நடிப்பதாலும், பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்காக இந்த படம் தயாரிக்கப்பட்டு வருவதாலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இந்நிலையில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தை சென்னை, திருச்சி, சேலம் ஏரியாக்களில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது. இந்த அறிவிப்பை உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளார்.
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.