சினிமா செய்திகள்
அல்லு அர்ஜுன் படத்திற்காக இப்படியொரு விஷயத்தை செய்த ஜெயராம்!
தெனாலி, துப்பாக்கி உள்ளிட்ட பல படங்களில் காமெடியில் கலக்கிய ஜெயராம், மலையாளம், தமிழ் என பல படங்களில் பல வருடமாக ஹீரோவாக கலக்கி வருகிறார்.
இந்நிலையில், தற்போது தெலுங்கின் முன்னணி இயக்குநர் த்ரிவிக்ரம், அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் புதிய படத்தில் ஜெயராமுக்கு முக்கியமான ரோல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள ரோல் குண்டான ரோல் இல்லையாம். கொழு கொழுவென இருக்கும் ஜெயராமுக்கு ஏன் இப்படி ஒரு ரோல் தரப்பட்டது என்ற சந்தேகம் அவருக்கே முதலில் தோன்றியதாம்.
பின்னர், உடல் எடையை குறைத்துவிட்டு நடிக்க வேண்டும் என்ற சவாலும் முன் வைக்கப்பட, இரு மாதங்களில் சுமார் 12 கிலோ வரை எடையை குறைத்து, கடினமான உடற்பயிற்சி செய்து ஃபிட்டான தோற்றத்துக்கு அட ஜெயராமா இது என எண்ணத் தோன்றும் அளவுக்கு மாறியுள்ளார்.
மேலும், இந்த படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக தபு நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.