சினிமா செய்திகள்
அம்மா சம்மதத்துடன் தான் நிர்வாணமாக நடித்தேன் – அமலாபால்!
அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இந்தியளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. டீசரின் இறுதியில் அமலாபால் ஆடையின்றி முழு நிர்வாணமாக நடித்திருந்த காட்சி இடம்பெற்று இருந்தது.
ஏற்கனவே இந்திய சினிமாவில் ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நிர்வாணக் காட்சிகளில் முழு உடல் தெரியும்படியெல்லாம் நடித்து சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.
இந்த காட்சியில் அந்த அளவுக்கு ஆபாசம் இல்லை என்றாலும், முழு நிர்வாணமாக நடித்திருந்தததற்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். சிலர் அமலாபாலின் இந்த துணிச்சலான முடிவுக்கு ஆதரவும் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், தற்போது அளித்த பேட்டி ஒன்றில், நிர்வாணக் காட்சியில் நடிக்கும் முன்பு தான் தனது அம்மாவிடம் அனுமதி பெற்றே அவர்களின் முழு சம்மதத்துடன் மட்டுமே நடித்ததாக தெரிவித்துள்ளார்.
அமலாபாலின் தந்தையும் அந்த காட்சிக்கு ஆட்சேபணை தெரிவிக்க வில்லையாம். மாறாக அமலா பாலுக்கு தைரியத்தையே கூறியுள்ளார்.