சினிமா செய்திகள்
ஹன்சிகாவை தொடர்ந்து அந்த காட்சியில் நடித்த மகிமா!
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் அசுரகுரு படத்தில் நாயகியாக மகிமா நம்பியார் நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சிக்காக மகிமா நம்பியார் சிகரெட் பிடித்துள்ளார்.
நாயகர்கள் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் படத்தில் இடம்பெற்றாலே சர்ச்சைகள் கிளம்பி வரும் நிலையில், ஹன்சிகாவை தொடர்ந்து மகிமா நம்பியாரும் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியில் நடித்துள்ளார்.
படத்திற்காக முதன்முதலாக சிகரெட் பிடித்ததாகவும், புகையை தொண்டைக்குள் செல்லாமல் பார்த்துக் கொண்டதால் இருமல் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
அசுரகுரு படத்தை தொடர்ந்து ஆர்யா நடித்து வரும் மகாமுனி படத்தில் பத்திரிகை நிருபராக மகிமா நடித்து வருவதாகவும் கூறினார்.