சினிமா செய்திகள்
காப்பான் சேட்டிலைட் உரிமையை கைப்பற்றியது யார் தெரியுமா?
சூர்யாவின் காப்பான் பட செயற்கைக் கோள் உரிமையை பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவி கைப்பற்றியுள்ளது.
சூர்யா, ஆர்யா, மோகன் லால், சாயிஷா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படத்தை கேவி ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 30ம் தேதி திரைக்கு வருகிறது.
தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே படங்களின் தோல்வியால் சூர்யாவின் மார்க்கெட் சற்றே சறுக்கியுள்ள நிலையில், காப்பான் படத்தின் பிசினஸ் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
விஜய் டிவி, ஜி தமிழ், சன் டிவி என மூன்று பெரு நிறுவனங்கள் நடத்திய போட்டியில் சன் டிவி இறுதியாக படத்தின் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூர்யாவின் ரசிகர்களுக்கு காப்பான் நிச்சயம் திருப்திபடுத்தும் அளவுக்கு வந்திருக்கிறது என்ற தகவல்களும் கசிந்து வருகின்றன.
சூர்யாவின் ஃபேவரைட் இயக்குநரான கே.வி. ஆனந்த் இயக்கம் என்பதால், அயன், மாற்றான் படங்களை போல நல்ல திரைக்கதை அம்சத்துடன் மாஸ் அண்ட் கிளாஸ் ஆக படம் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. காத்திருப்போம்.