சினிமா செய்திகள்
பிகில் படத்தின் மாஸ் அப்டேட் இதுதான்!
தீபாவளிக்கு ரிலீசாகவுள்ள நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் ஒரு பாடலை விஜய் பாடவுள்ளார் என்கிற மாஸ் அப்டேட்டை அர்ச்சனா கல்பாத்தி புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.
மெர்சல், சர்க்கார் என தொடர்ந்து இரு படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தாலும், அவரது இசையில் விஜய் ஒரு பாடல் கூட பாடவில்லையே என்ற ஏக்கம் தளபதி ரசிகர்களுக்கு இருந்து வந்தது.
இந்த நிலையில், பிகில் படத்தில் வெறித்தனம் எனத் தொடங்கும் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார் என்ற அப்டேட் வெளியாகியுள்ளது.
இந்த பாடலுக்கான வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதி கொடுத்துள்ளார். வரும் ஆகஸ்ட்டில் வெறித்தனம் பாடல் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.
இசைப்புயல் இசையில் வெறித்தனமாக தளபதி பாடவுள்ள பாடல், ஆளப்போறான் தமிழன் பாடலை பீட் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.