சினிமா செய்திகள்
நெட்டிசன்களால் கிழித்து தொங்கவிடப்பட்ட கியாரா அத்வானி!
அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபீர் சிங், வெளியாகி மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. சமீபத்தில் 200 கோடி கிளப்பில் இந்த படம் இணைந்ததை கொண்டாட ஒரு சக்சஸ் பார்ட்டிக்கு படக்குழு ஏற்பாடு செய்திருந்தது.
அந்த பார்ட்டிக்கு வந்த நடிகை கியாரா அத்வானி, பேஷன் உடை ஒன்றை அணிந்து, படு கிளாமராக நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால், அவரது உடை ஹோட்டலில் டேபிள் துடைக்கும் துணி போன்று உள்ளது என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் மீம்ஸ்களாக குவித்து கிழித்து தொங்க விட்டுள்ளனர்.
கபீர் சிங் படத்தின் நாயகன் ஷாகித் கபூர் மற்றும் கியாரா அத்வானியின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தோனியின் வாழ்க்கை வரலாறு படமான எம்.எஸ். தோனி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கியாரா அத்வானி, ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் இந்தியில் உருவாகும் லக்ஷ்மி பாம்ப் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.