சினிமா செய்திகள்
மிரளவைக்கும் பாக்ஸர் பட போஸ்டர்கள்!
![Boxer - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/07/D-pEKyAVUAEa_mY.jpg)
உலகளவில் பாக்ஸிங் சினிமா என்றாலே அதற்கான தனி ரசிகர் பட்டாளம் எப்போதுமே உண்டு. தமிழில் வெளியான பாக்ஸிங் படங்களில் இறுதிச்சுற்று மிகப்பெரிய வெற்றியையும், இந்தியளவில் பாராட்டுக்களையும் பெற்றது.
இந்நிலையில், அருண்விஜய், ரித்திகா சிங் நடிப்பில் பாக்ஸர் என்ற தலைப்பில் உருவாகியுள்ள படத்தின் அட்டகாசமான மிரளவைக்கும் போஸ்டர்கள் வெளியாகி உள்ளது.
அருண்விஜய் தனது அதீத உடற்பயிற்சினால், ஒரு பீஸ்டை போல தனது உடலை வடிவமைத்துள்ளார். இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு மீண்டும் பாக்ஸிங் சம்பந்தமான படத்தில் நடிகை ரித்திகா சிங் நடிப்பது அவரது ரசிகர்களுக்கு கூடுதல் ஆனந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
விவேக் இயக்கத்தில் மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் வெளியிடுகிறது.