சினிமா செய்திகள்
ஹோல்ட் ஏஜ் ஹோம் ஸ்டேட்டஸை மாற்ற பிக்பாஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!
பிக்பாஸ் சீசன் 3ல் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் பலரும் ஆண்டிகளாக இருப்பதால், இது ஹோல்ட் ஏஜ் ஹோம் என்ற கிண்டல் வைரலாக பரவியது.
இந்நிலையில், ரசிகர்களின் இந்த மனநிலையால், பிக்பாஸ் நிகழ்ச்சி எதிர்பார்த்த டிஆர்பி ரேட்டிங்கை பெறவில்லை.
ஏதாவது சண்டையை மூட்டி டிஆர்பியை எகிற வைக்க அவர்கள் செய்த முயற்சிகளுக்கும் பலன் கிடைக்கவில்லை.
இந்நிலையில், நேற்று 16வது போட்டியாளராக மீரா மிதுன் எனும் மாடல் அழகியை இறக்கியுள்ளனர்.
8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் என இரு படங்களில் நடித்த இவர், சென்னை அழகிப் போட்டியின் டைட்டில் வின்னர். ஆனால், அந்த போட்டியை இவரே ஏற்பாடு செய்து டைட்டிலை இவரே சூட்டிக் கொண்டார் என்ற சர்ச்சை வெடித்தது வேறு கதை.
பிக்பாஸ் இல்லத்தில் போட்டியாளராக வரவேண்டும் என்றால், அவர்களுக்கு பின்னால், ஒரு சர்ச்சை கட்டாயம் தேவைப்படுகிறது. அந்த வகையில், அடுத்த அரை டவுசர் போட்டுக் கொண்டு ஆட களமிறக்கப்பட்டுள்ள போட்டியாளர் தான் மீரா மிதுன்.
இனியாவது ஹோல்ட் ஏஜ் ஹோம் என்ற டைட்டில் பிக்பாஸ் சீசன் 3க்கு மாறுமா என்பதை பார்ப்போம்.